மேலும் அறிய

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யபடும் - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி ரயில்வே ஜங்சன் எதிரில் மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் அறப்போராட்டம் நடைபெற்றது.

திருச்சி ரயில்வே ஜங்சன் எதிரில்  காதிகிராப்ட் அலுவலகம் முன்பு திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், மாநில ஆளுநரையும் கண்டித்து மாபெரும் உண்ணாவிரத அறப்போரட்டம் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த அறப்போரட்டத்தை மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா சிறப்பு  அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த உண்ணாவிரத அறப்போரட்டத்தில் மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணிகளின் நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள் உட்பட 300க்கும்  மேற்ப்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யபடும் - அமைச்சர் கே.என்.நேரு

மேலும், உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பி எம்.ஆனந்த்,மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் கண்ணன், மாநில பொறியாளர் அணி எஸ்.கே.பி கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மண்டல குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரத்தை முடித்து வைத்தார். 

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யபடும் - அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு பேசியது..

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் அதிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து திமுக அரசு பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் அல்லாமல் அமைச்சர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து மனுக்களும் கொடுக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆளுநர் எதற்கும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பிலே போட்டுவிட்டார் . தமிழக ஆளுநர் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் எதிர்க்கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் எதற்கும் அஞ்சாமல் தமிழக மக்களுக்காக நமது முதலமைச்சர் போராடி வருகிறார்.  மத்தியில் திமுக கூட்டணி, இந்திய கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால் தமிழ்நாட்டில் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். 

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யபடும் - அமைச்சர் கே.என்.நேரு

பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது..

நீட் தேர்வால் தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா மரணம் அனைவரையும் உருகுலைய செய்தது. திமுக ஆட்சி அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனிதாவின் இறுதி சடங்கு முடியும் வரை அவர் குடும்பத்துடன் இருந்தோம். மேலும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட ஜெகதீஷ் என்ற  மாணவர், அவர் இறந்ததை தாங்க முடியாமல் தந்தையும் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நீட் தேர்வு தனியார் பயிற்சி மையங்கள் அதிகரித்துள்ளது. பணம் படைத்தவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

ஏழை, எளிய மக்கள் மருத்துவ கனவு கனவாகவே இருக்கிறது. ஆகையால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி, அதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் ஜனாதிபதி வரை எடுத்துச் சென்றுள்ளோம்.  ஆனால் அந்த கோப்புகளில் இன்று வரை ஜனாதிபதி அவர்கள் கையெழுத்து இடவில்லை. தொடர்ந்து தமிழ்நாட்டில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும், தற்போது ஆளுங்கட்ச்சியாக இருந்த போதும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிற்கே சேர்த்து தான் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார். இவ்வாறு பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget