மேலும் அறிய

பெரியார் சிலையை யாராலும் அகற்ற முடியாது - எம்.பி. திருமாவளவன்

பெரியார் சிலையை அகற்றுவோம் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது , மணலை கயிறாக திரிப்போம்,வானத்தை வில்லாக வளைப்போம் என்பது போல் உள்ளது - திருமாவளவன் பேட்டி..

திருச்சியில் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ள  தேசம் காப்போம் மாநாடு தொடர்பான இடத்தை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு திருச்சி விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய  திருமாவளவன் கூறியதாவது: வருகின்ற டிசம்பர் மாதம் 23ஆம் தேதி ஜனநாயகம் வெல்லும் மாநாடு ஒருங்கிணைக்க உள்ளோம். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, டி. ராஜா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் தமிழக திமுக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் இதில் பங்கு பெறுகின்றனர். வேங்கைவயல் வழக்கு தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் சிலர் ஒத்துழைக்க மறுப்பதாக கருத்து சொல்லப்பட்டுள்ளது.அது நடைபெற்று விரைந்து குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும். 


பெரியார் சிலையை யாராலும் அகற்ற முடியாது - எம்.பி. திருமாவளவன்

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் ஆகிய கட்சிகள் பேரணி நடத்துகிறது. அவர்களால் கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கெட்டுப் போகுமா?தமிழகத்தில் பாஜக கட்சியின் கூட்டங்களுக்கு ஒரு சதவீதம் கூட கட்சியினர் வருவதில்லை அது தான் எதார்த்தமான உண்மை அவர்கள் கூட்டணி கட்சியிடமும், சாதி அமைப்பினரும் ஆள் பிடிக்கிறார்கள். மணலை கயிறாக திரிப்போம் வானத்தை வில்லாக வளைப்போம் என்று சொல்லுகிற கூற்றைப் போல் இது இருக்கிறது . குறிப்பாக பெரியார் சிலை அகற்றவும் முடியாது, மணலை கயிறாக திரிக்கவும் முடியாது. 

இது பரபரப்புக்காக ஊடக கவனத்தில் இருப்பதற்கான பேச்சாகும், தமிழகத்தில் இதெல்லாம் எடுபடாது என தெரியும்.நாடாளுமன்ற தேர்தல் வரை இவரது பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும், அதன் பிறகு யாரும் இருக்க மாட்டார்கள்.பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அடையாளங்களோடு தான் பாமக துவங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. பெரியாரை விமர்சிக்கிற பொழுது அவர்கள் அமைதியா இருந்தால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தமிழ் மொழி உலகம் தொன்று தொட்டு அனைவராலும் போற்றக்கூடிய மொழியாகும். இந்நிலையில் மோடியை தமிழ் மொழியை  கொண்டு செல்வதற்கு முன்பாக உலகம் முழுவதும் தமிழ் போய்விட்டது, உலகப் புகழ்பெற்ற மொழி தமிழ் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள். பிக் பாஸ் தற்போது பரபரப்பா போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பிக் பாஸ் நான் பார்ப்பதில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
உன்னை உள்ளே தூக்கி வைப்பேன்”... சாட்சியை மிரட்டும் பெண் காவலரின் பரபரப்பு ஆடியோ வைரல்
உன்னை உள்ளே தூக்கி வைப்பேன்”... சாட்சியை மிரட்டும் பெண் காவலரின் பரபரப்பு ஆடியோ வைரல்
திடீரென மாற்றப்பட்ட ரயில் நேரங்கள்! பயணிகள் செய்ய வேண்டியது என்ன?
திடீரென மாற்றப்பட்ட ரயில் நேரங்கள்! பயணிகள் செய்ய வேண்டியது என்ன?

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget