மேலும் அறிய

“தமிழ்நாட்டில் தினம் தினம் ரைடு நடக்கிறது; அமைச்சர்கள் பயத்தில் இருக்கிறார்கள்” - போட்டு உடைத்த அமைச்சர் நேரு

சேலத்தை பொருத்தவரை பாமக தனித்து தேர்தலை சந்தித்தால் திமுக அமோக வெற்றி பெறும். மாறாக கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவது சிரமம் என தெரிவித்தேன்.

திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர்கள் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும், மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர்கள் ராமலிங்கம் எம்.பி., கோவை செழியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கூட்டத்தில், நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் தி.மு.க.வினர் முழுமையாக பங்கேற்கும் வகையில் அனைத்து சங்கங்களிலும் உறுப்பினராக சேர விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விரைவில் அந்தந்த சங்கங்களில் ஒப்படைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற உள்ள புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய அடுத்த மாதம் நடைபெறும் சிறப்பு முகாமின் போது அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் தி.மு.க.வினர் அனைவரும் பங்கேற்று புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

“தமிழ்நாட்டில் தினம் தினம் ரைடு நடக்கிறது; அமைச்சர்கள் பயத்தில் இருக்கிறார்கள்” - போட்டு உடைத்த அமைச்சர் நேரு

மேலும், கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, “நமது கட்சியில் சில பிரச்சனைகள் இருந்தாலும் நமக்குள் அதை வைத்துக்கொண்டு, கட்சி வளர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணன்,தம்பி போன்று செயல்பட வேண்டும். கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அது தலைமை நிச்சயமாக செய்யும். பாஜக அரசு - தமிழ்நாட்டில் திமுகவை அழிக்க பார்க்கிறது. அதன் ஒரு பகுதியாக தான் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதனால் தினம் தினம் அமைச்சர்கள் பயந்து உள்ளனர். இந்நிலையில்தான் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் சிறுபான்மை வாக்குகளை பெறுவதற்காகவே அதிமுக இத்தகைய முடிவை எடுத்துள்ளது. ஆகையால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கு திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை எடுத்துரைத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும். 

“தமிழ்நாட்டில் தினம் தினம் ரைடு நடக்கிறது; அமைச்சர்கள் பயத்தில் இருக்கிறார்கள்” - போட்டு உடைத்த அமைச்சர் நேரு

திருச்சி , சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என கட்சி தலைமை என்னிடம் கேட்டது. திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய பகுதிகளில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம், ஆனால் சேலத்தை பொருத்தவரை பாமக தனித்து தேர்தலை சந்தித்தால் திமுக அமோக வெற்றி பெறும். மாறாக கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவது சிரமம் என தெரிவித்தேன். ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு மீண்டும் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும். இந்நிலையில் நாம் அனைவரும் கலைஞர் நூற்றாண்டு விழாவை தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆகையால் அனைத்து பகுதிகளிலும் 60 அடி உயரம் கொடி கம்பம் வைக்க வேண்டும். திருச்சி மத்திய மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளிலும் குறைந்தது 100 கொடி கம்பம் நிறுவ வேண்டும். அதுமட்டுமில்லாமல் 100 இடங்களில் கலைஞரின் திரு உருவ சிலையை வைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார். 

இந்த கூட்டத்தில் மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி உள்பட திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget