மேலும் அறிய

அரியலூரில் கலைஞா் அறிவாலயம் கட்ட நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்

அரியலூர் மாவட்டத்தில் கருணாநிதி அவர்களின் முழு திரு உருவ சிலை அமைக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர் பேச்சு

அரியலூர் மாவட்டத்தில் திமுக கட்சியின் பொது உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து மக்களுக்கு செய்து வரும் திட்டங்களை குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

குறிப்பாக ஏழை, எளிய பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை, கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்,  காலை உணவு திட்டம், விளையாட்டு துறைகளை மேம்படுத்த திட்டம், நகரப்புற வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டம் , மகளிருக்கு இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் முறைப்படி பொதுமக்களை சென்றடைவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

அரியலூரில் கலைஞா் அறிவாலயம் கட்ட நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்

குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் சாலைகள் மேம்படுத்துவது, பள்ளி கட்டிடங்கள் புதிதாக கட்டுவது , பேருந்து நிலையங்களில் முழுவதும் சீரமைத்து பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்குவது, ஏரி, குளங்கள் தூர் வாருவது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாட புத்தகங்கள் வழங்குவது மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவது என பல்வேறு திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பொய்யான பரப்புரையை பொதுமக்கள் மத்தியில் பேசி வருகிறார்கள். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு நன்றாக தெரியும் மக்களுக்கான ஆட்சி திமுக தான் என்று.

ஆகையால் நமது மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சிறப்பாகவும், ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். திமுக ஆட்சியில் அரியலூர் மாவட்டம் சிறந்த மாவட்டமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி நமது ஆட்சியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் இன்று வரை மின்சார வசதி இல்லாமல் 40 சதவீத குடும்பங்கள் உள்ளது. 

அரியலூரில் கலைஞா் அறிவாலயம் கட்ட நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்

இதேபோல் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. இதற்கு காரணம் மறைந்த திமுக முன்னாள் தலைவர்  கருணாநிதி ஆவார்.  அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழகம் வளா்ச்சிப் பெற்றுள்ளது. எனவே திராவிட மாடல் ஆட்சி தொடர, வரும் சட்டப்பேரவை தோ்தலில் கட்சியினா் தீவிர களப் பணியாற்ற வேண்டும்.

அரியலூரில் கருணாநிதியின் முழு உருவச் சிலை வைக்கவும், அறிவாலயம் கட்டவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்துக்கு அக்கட்சியின் சட்ட திட்ட திருத்தக் குழு இணைச் செயலா் சுபா. சந்திரசேகா் தலைமை வகித்தாா். மாநில கொள்கைப் பரப்பு துணை செயலா்  பெருநற்கிள்ளி, தலைமைக் செயற்குழு உறுப்பினா் பாலசுப்ரணியன், முன்னாள் எம்எல்ஏ அமரமூா்த்தி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

அரியலூா் நகரச் செயலா் முருகேசன்,  துணைச் செயலா்களில் சந்திரசேகரன், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget