Lok Sabha Election 2024: திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஒரே மேடையில் 40 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் இபிஎஸ்
திருச்சியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் 40 தொகுதி வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது . தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என நோக்கில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய முன்தினம் 22 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து முதல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருச்சியில் அதிமுக முதல் தேர்தல் பிரச்சாரம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை திருச்சியில் இன்று மாலை தொங்குகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள 40 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களை ஒரே மேடையில் ஆதரித்து பிரச்சாரத்தில் தொடங்குகிறரார். குறிப்பாக அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், ஶ்ரீரங்கம் தொகுதி வண்ணாங்கோயில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடியார், மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணியளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகை தருகிறார். கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
ஒரே மேடையில் 40 தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம்
திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டுகிறார்.
இந்த மேடையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
திருச்சியை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் தொடங்க காரணம் என்ன??
திருச்சியில் மையப்படுத்தி திராவிட கட்சிகள் அரசியல் நிகழ்வுகள் தேர்தல் பிரச்சாரம் எதுவாக இருந்தாலும் திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனையாக அமையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை. ஆகையால் தான் எப்போது தேர்தல் வந்தாலும் அல்லது கட்சி ரீதியான முக்கிய முடிவுகள் எடுத்தாலும் திருச்சியில் முதல் கூட்டத்தை தொடங்குவது திராவிட கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக முதல் பிரச்சாரக் கூட்டத்தை திருச்சியில் தொடங்கினர். அதேபோல் இன்று அதிமுக தனது 40 தொகுதி வேட்பாளர்களையும் அச்சாரக் கூட்டத்தை இன்று நடைபெற உள்ளது. முக அதிமுக கட்சி விளக்கு யாருக்கு திருச்சி திருப்புமுனையாக அமையும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.