மேலும் அறிய

தரமற்ற உரங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை பாயும்- திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை

தரமற்ற உரங்களை விற்பனை செய்தால், விற்பனை நிலையங்கள் மீதும், விற்பனையாளர்கள் மீதும் ,உர ஆய்வாளர்களால் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்கப்படும்.

காவரி ஆற்றில் இருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டதையொட்டி திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை பல்வேறு கடைகளில் பெற்று செல்கிறார்கள். இது போன்று விற்பனையாளர்களிடம் இருந்து உரத்தை பெற்று சென்ற விவசாயிகள் தரமற்றதாக உள்ளது என தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு தரமான உரம் சென்று அடைகிறதா என தொடர்ந்து அரசின் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக விவசாயிகளுக்கு தரமற்ற உரங்களை விற்பனை செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் உரம் கட்டுப்பாட்டு ஆய்வகம் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தில் ரசாயன உர மாதிரிகள் ஆய்வு செய்யபட்டு வருகிறது. விவசாய பயன்பாட்டுக்கென்று நேரடி உரம் கூட்டுரம், கலப்புரம், போன்ற மரபான ரசாயன உரங்கள் தவிர்த்து இப்போது பயன்பாட்டில் உள்ள நூறு சதவீதம் நீரில் கரையும் உரம், நுண்ணூட்டங்களுடன் செறிவூட்டப்பட்ட கூட்டுரம் போன்றவையும் பயன்பாட்டில் உள்ளன. இவை சொட்டு நீர்பாசனம், நுண்ணிய பண்ணையம், உயர் தொழில்நுட்ப வேளாண்மை போன்றவற்றில் பெரும் அளவில் பயண்படுத்தபட்டு வருகிறது. 

தரமற்ற உரங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை பாயும்- திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை

இந்த அனைத்து வகையான ரசாயன உரங்கள், நேரடி நுண்ணூட்டங்கள்,  நுண்ணூட்ட கலவைகள், போன்ற உரங்களும் உர கட்டுப்பாடு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன. உர ஆய்வாளர்களால், உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு என பெறப்படுகின்றன. பெறப்பட்ட மாதிரிகள் அனைத்தும் உர கட்டுப்பாட்டு ஆணை 1985 குறிப்பிட்டபடி பல்வேறு தர  சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் தரமானவை அல்லது தரமற்றவை என்று முறையாக அறிவிக்கப்படுகின்றன. தரமற்ற மாதிரிகளை விற்பனை செய்த விற்பனை நிலையங்கள், மீதும் விற்பனையாளர்கள் மீதும் உர ஆய்வாளர்களால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தரமற்ற உரங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை பாயும்- திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை

இந்த ஆய்வகம் மூலம் தரமான ரசாயன உரங்கள் விவசாயிகளை சென்று அடைவது உறுதி செய்யப்படுகிறது, என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். மேலும் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு தேவையான உரங்களை வாங்கும்போது தரமாக உள்ளதா என்பதை நன்கு கண்டறிந்து வாங்க வேண்டும். மற்றவர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டு தேவையற்ற உரங்களை பயன்படுத்தினால் விவசாய நிலம் பெரிய அளவில் பாதிக்கப்படும். குறிப்பாக தரமற்ற உரங்களை விற்பனை செய்யக்கூடிய நிலையங்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது புகார் தெரிவிக்கலாம். புகார்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் விற்பனை நிலையங்கள் மீதும், விற்பனையாளர்கள் மீதும் ,உர ஆய்வாளர்களால் சட்டபூர்வ நடவடிக்கைகளை  எடுக்கப்படும். மேலும்  அரசு அங்கீகாரம் பெற்று தரமான உரம் என்று சான்றிதழ் வழங்கப்பட்ட உரங்களை மட்டுமே விவசாயிகள் வாங்கி பயன்பெற வேண்டும், என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Embed widget