தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள்..
திருச்சி நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரனையை மேற்கொண்டுள்ளனர் காவல்துறையினர்.
1-திருச்சி நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கு :4 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில் 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.2 சிறுவர்கள் உட்பட கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். இன்று அதிகாலை 3 மணியளவில் 4 பேர் பிடிபட்டனர் - இவர்களில் 2 பேர் சிறுவர்கள் கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர்கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆடுகளை திருடும் தொழிலை பல வருடகாலமாக செய்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்ததுள்ளது, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
2- திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் டெங்கு காய்ச்சல், இதுவரை திருச்சி அரசு மருத்துவமனையில் 15 பேர்கள் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி டெங்கு காய்ச்சல் தடப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தியுள்ளது.
3. திருச்சியில் அகோரி பாபா மணிகண்டன் அரை நிர்வாண கோலத்தில் சங்குகள் முழங்க தனது சிஷ்யையை திருமணம் செய்து கொண்டது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. திருச்சியில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சரியாக பராமரிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
5. பெரம்பலூர் மாவட்டம் செந்துறை அருகில் உல்ள கீழ ராயம்புரம் கிராமத்தில் மீண்டும் மீண்டும் தொடர்கன மழையால் ஏரிகள் உடைந்து தண்ணீர் வீடு, விவசாய நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்ப்படுத்தி வருகிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.
6. அரியலூர் மாவட்டத்தில் தொடர்கன மழையால் ஜெயங்கொண்டம் அதன் சுற்று வட்டாரங்களில் நீர் அதிகமாக சூழ்ந்துள்ளது. மேலும் சித்தமல்லி ஏரியில் உபரிநீர் 1300 கன அடி முழுமையக வெளியேற்றப்படுவதால் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.
7. குளித்தலை, மேட்டூர் அணையில் உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் குளித்தலை கடம்பன் துறையில் காவிரிநீர் தொட்டு செல்கிறது.வெளியூர் மக்கள் நலன் கருதி எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நேற்று மதியம் வினாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறியது.இதனால் நாதல்படிகை கிராமம் தெற்கு தெருவில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.இதனால் அப்பகுதி மக்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.
9. மயிலாடுதுறை மாவட்டம் சாதிப் பெயரை சொல்லி கதிரவன் என்பவர் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் 6 பேர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10- திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொலை சம்பவங்கள் முற்றிலுமாக தடுக்க காவல்துறை உயர் அதிகாரி தலைமையில் ஆலோசனை கூட்டம்..