மேலும் அறிய

முப்படை ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு... வரும் 30ம் தேதி திருச்சிக்கு வந்திடுங்க

ஓய்வூதியதாரர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை 8807380165 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி: திருச்சியில் வரும் 30ம் தேதி முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர் முகாம் நடக்க உள்ளதாக சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் வரும் 30ம் தேதி முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் ஓய்வூதியதாரர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை 8807380165 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன. இந்த குறைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கும், ஓய்வூதிய குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  ராணுவம், கடற்படை, விமானப்படையின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த முகாமில் ஓய்வூதியதாரர்கள் பங்கேற்று தங்களது பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். அதேபோல ஓய்வூதியம் தொடர்ந்து கிடைப்பதற்குத் தேவையான உயிர் சான்றைப் புதுப்பித்தல், பெயர் மற்றும் இதர தகவல்களைத் திருத்துதல், ஓய்வூதியத் தொகையில் உள்ள முரண்பாடுகளைச் சரிபார்த்து, சரியான தொகையை பெறுவதற்கான வழிமுறைகளை பெறுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

அந்தவகையில், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதில் வரும் 30ம் தேதி திருச்சியில் குறைதீர் முகாம் நடக்க போவதாக குறிப்பிட்டுள்ளார்.

முப்படை ( ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காண ஓர் மாபெரும் SPARSH ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ பரேடு கிரவுண்டில் ( Army Parade Ground) வரும் 30-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் உயிர் சான்று அடையாளம் காணுதல், SPARSH ஓய்வூதியத்தில் பெயர் மற்றும் இதர தகவல்களை திருத்துதல், ஓய்வூதிய தொகை திருத்துதல், ஆதார் புதுப்பித்த்தல், OROP குறைகள் நிவர்த்தி செய்தல், பாதுகாப்பு குடும்ப ஓய்வூதியத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல் என பல்வேறு பணிகளுக்காக தனித்தனியே ஸ்டால்கள் அமைக்கப்பட்டு ஓய்வூதிய சேவைகள் வழங்கப்பட உள்ளன.

மேலும் இந்த முகாமில் அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், பல்வேறு முப்படை ஆவண அலுவலகங்கள் (Record Offices), அனைத்து வங்கிகள் ஆகியவற்றின் அலுவலர்கள் பங்கு பெறவிருக்கின்றனர்.

இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

எனவே தமிழகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 30-ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ள இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் ஓய்வூதிய குறைகளுக்கு தீர்வு காண அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக திருச்சி மற்றும் அருகாமை மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் இம்முகாமில் பெருந்திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர் தங்கள் படைபணிச் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் கார்டு, பான கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசலுடன் நேரில் வந்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ள விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை 8807380165 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் ஓய்வூதியதாரர்களுக்கு முகாமில் முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget