மேலும் அறிய
Advertisement
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளது - அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது.
திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம் மலைக்கோட்டை கிளையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறப்பு விழா நடந்தது. மேலும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மலைக்கோட்டை பணிமனை கிளையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு 669 பயனாளிகளுக்கு ரூ.196.47 லட்சம் பணப்பலன்களை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது. இன்றைக்கு அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு போக்குவரத்துக்கழக தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர வேலை போக்குவரத்துக்கழகத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகளை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதியத்தை உயர்த்தி வழங்கியிருக்கிறார். அதேபோன்று கடந்த ஆட்சியில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை" என்றார்.
மேலும், "மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பணியாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு போக்குவரத்து கழகத்திற்கு முதல்வர் ரூ.1,500 கோடி வழங்கினார். தற்போது மகளிருக்கு இலவச கட்டணம் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த தொகையையும் சேர்த்து நடப்பாண்டுக்கு ரூ.2,200 கோடி வழங்க இருக்கிறார். தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிப்போர்களின் எண்ணிக்கையும், வருவாயும் உயர்ந்திருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்சினை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேபோன்று கடந்த ஆட்சியில் ஒரு நடத்துனர், டிரைவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆனால் இப்போது முதல்வர் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலேயே 21 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம் தான்" என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion