மேலும் அறிய
Advertisement
காதலன் இறந்த துக்கத்தில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை - திருச்சியில் சோகம்
காதலன் இறந்த துக்கத்தில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொன்மலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் சகாயராஜ். இவரது மகன் கிளமெண்ட் (வயது 23). இவர் பட்டய படிப்பு படித்து வந்தார். இவரும், இவரது உறவினரான திருச்சி செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெருவை சேர்ந்த ஞானகுமாரின் மகள் ஹாட்டினா பிரியதர்ஷினியும்(22) காதலித்து வந்தனர். ஹாட்டினா பிரியதர்ஷினி திருச்சி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கிளமெண்ட் நீண்ட நாட்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் நேற்று முன்தினம் காலை அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த ஹாட்டினா பிரியதர்ஷினி அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உறவினர்களுடன் சென்று அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். மேலும் மிகுந்த துக்கத்தில் இருந்த அவர், வீட்டில் உள்ளவர்களிடம் பேசவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹாட்டினா பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹாட்டினா பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் இறந்த துக்கத்தில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொன்மலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கல்வி
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion