மேலும் அறிய

'நான் அரசியலுக்கு வருவதற்கு காரணம் திமுக தான்" - பாஜக தலைவர் அண்ணாமலை

போதையை ஒழிப்போம் என்று முதலமைச்சர் கடந்த 13-ந் தேதி அறிவித்தார். ஆனால் 14-ந் தேதி டாஸ்மாக் ஒருநாள் வருமானம் ரூ.250 கோடியாகும். தி.மு.க. டிராமா ஆட்சி நடத்துகிறது- பாஜக அண்ணாமலை

புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “புதுக்கோட்டை என்றால் நாட்டுப்பற்று மிகுந்த ஊர். இங்கிருந்து தான் சத்தியமூர்த்தி, டாக்டர் முத்துலெட்சுமி போன்றவர்கள் வந்துள்ளனர். புதுக்கோட்டை தமிழ்நாட்டில் இருந்து புறக்கணிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி முன்னேற அனைத்து நடவடிக்கையும் நாங்கள் மேற்கொள்வோம். இந்த சுதந்திர தினத்தில் 40 லட்சம் தேசிய கொடியை நாம் கொடுத்துள்ளோம். தி.மு.க. ஆட்சியில் சாதி, மத பேதம் எல்லா இடத்திலும் உள்ளது. சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. நரிக்குறவ பெண்ணான அஷ்வினிக்கு வீடுகட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த செக் செல்லாமல் போய்விட்டது. நரிக்குறவர்களை  பட்டியல் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும். 

நான் அரசியலுக்கு வருவதற்கு காரணம் திமுக தான்

திராவிட மாடல் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களை பிற்படுத்தப்பட்ட மக்களாகவே வைத்துள்ளது. பா.ஜ.க. பொறுப்பான கட்சி. அடக்கு முறைக்கு பயப்படும் கட்சி பாஜக அல்ல. திமுக தேர்தலின் போது 508 வாக்குறுதி அளித்தது. ஆனால் மகளிர் உதவித்தொகை, கல்வி கடன் ரத்து, நகை கடன் ரத்து, டீசலுக்கு ரூ.3 குறைப்பு, கியாஸ்க்கு ரூ.100 மானியம் போன்ற எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் 18 நாளில் மீட்கப்பட்டனர். தமிழகத்தின் கஜானா காலியாகி வருகிறது. கனிமவளத்தின் மூலம் வரும் வருவாய் ரூ.125 கோடி அளவில் குறைந்துள்ளது. 

நான் அரசியலுக்கு வருவதற்கு காரணம் திமுக தான்

போதையை ஒழிப்போம் என்று முதலமைச்சர் கடந்த 13-ந் தேதி அறிவித்தார். ஆனால் 14-ந் தேதி டாஸ்மாக் ஒருநாள் வருமானம் ரூ.250 கோடியாகும். தி.மு.க. டிராமா ஆட்சி நடத்துகிறது. தமிழகத்திற்கு ரூ.6 லட்சத்து 14 ஆயிரம் கோடி கடன் உள்ளது. தமிழக அமைச்சர்கள், டெல்லியில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள அச்சப்படுகின்றனர். தி.மு.க., பா.ஜ.க.வை பார்த்து ஏன் பயப்படுகிறது?. நான் படித்ததற்கு காரணம் தி.மு.க. என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள். தவறு. நான் அரசியலுக்கு வருவதற்கு காரணம் தி.மு.க. தான். 2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்டெடுப்போம். இந்தியா முழுவதும் மாற்றம் ஆரம்பமாகிவிட்டது” எனப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ஜ.க.சரவணன், நலத்திட்ட மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன், நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.என்.மதி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget