கல்லக்குடி கொண்ட கருணாநிதியா? கண்ணதாசனா? - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடையை திறப்போம் பாஜக அண்ணாமலை பேச்சு
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் - என் மக்கள் 4 காம் கட்ட நடை பயணத்தில் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் தொடங்கினார்.
பின்னர் லால்குடி ரவுண்டானாவில் பேசிய அண்ணாமலை கூறியது.. "லால்குடி ஏழு சப்த ரிஷிகள் ஈஸ்வரனை வழிபட்ட கோயில் அமைந்த ஊர். சனாதான தர்மத்தை பேணிக்காப்பது இங்கே சரியாக பொருந்தும். 40 செங்கல் சூளைகள் லால்குடியில் உள்ளது. உழைப்பாளிகளால் உருவாக்கப்படும் செங்கல்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடுகளில் லால்குடி செங்கல் இருக்கும். கடந்த ஜூலை மாதத்தில் லால்குடியில் செங்கல் சூளைகளில் வேலை பார்த்த 6 கொத்தடிமைகளை மீட்டதாக செய்தி படித்தேன்.
ஆனால் இங்கே இரண்டு அமைச்சர்களும் லால்குடியை சொந்த ஊர்களாக கொண்டவர்கள். ஒருவர் அமைச்சர் கே.என். நேரு மற்றொருவர் அன்பில் மகேஸ். குறிப்பாக நேரு தற்போதே தனது வேலையை தொடங்கி விட்டார், அவரது மகனை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குவதற்கு முயற்சியைகளை தொடங்கிவிட்டார். திமுகவில் மூன்றாம் தலைமுறையாக குடும்ப ஆட்சியில் வந்துள்ளார். அதற்கு உதாரணம் அன்பில் மகேஷ் ஆவார். திமுக என்றாலே குடும்ப ஆட்சி அவர்களது குடும்பம் அவர்கள் மட்டுமே. 1967 முதல் இதைதான் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் யாத்திரை ஒவ்வொரு படித்த இளைஞர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வேலைக்கேற்ற ஊதியம் இதனை உருவாக்குவத நோக்கம்.
மேலும் கல்லக்குடி பேரூராட்சி தலைவராக இருந்த பால்துரை அப்பகுதி மக்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு லால்குடி டால்மியா சிமெண்ட் கம்பெனியில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி இருந்தார். பணத்தை கொடுத்தவர்கள் கேட்ட பொழுது நேரடியாக சிமெண்ட் நிறுவனத்தில் உள்ளே புகுந்து பாதுகாவலர்களை அடித்து உள்ளே இருக்கக்கூடிய கணிப்பொறிகள் எல்லாம் உடைத்து எறிந்தவர் இந்த திமுக காரர் பால்துரை ஆவார்.
திமுக என்றாலே ஓசி டீ, பிரியாணி சாப்பிட்டு பில் கொடுக்காமல் செல்வது, பியூட்டி பார்லரில் தகராறு செய்வது,சிமெண்ட் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுவது இதை அனைத்தும் செய்வது திமுகவினர். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை மாமூல் மாமூல் திமுகவில் மட்டும் தான். சென்னைக்கு வந்தால் அமைச்சர்கள் மாமூல் உள்ளூருக்கு வந்தால் உள்ளூர் திமுக பிரமுகர்கள் மாமூல். அமைச்சர் கீதாஜீவன் இடம் முட்டை எப்படி கெட்டுப் போனது என கேட்ட பொழுது முட்டையில் கருப்பு கலர் சீல் வைத்து வைத்திருந்தோம் மழை காரணமாக முட்டையில் கருப்பு கலர் கரைந்து கலந்து முட்டை கெட்டு விட்டதாக பதில் அளிக்கிறார்.
இந்தியாவிலேயே மோசமான ஆட்சி திமுக ஆட்சி எதை எடுத்தாலும் மாமூல் உச்சத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் தான் கல்லக்குடி கொண்ட கருணாநிதி என திமுகவினர் அனைவரும் கருணாநிதி அய்யாவை சொல்லுவார்கள். கண்ணதாசனின் வனவாசத்தில் ஒரு உண்மையை எழுதியுள்ளார். டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றுவதற்கு கல்லக்குடியில் போராட்டம் நடைபெற்றது. அதில் மூன்று குழுக்கள் கலந்து கொண்டது. ஒரு குழுவில் கருணாநிதி கலந்து கொண்டார். மூன்றாவது குழுவில் கண்ணதாசன் கலந்து கொண்டார். 1953இல் ஜூலை நடைபெற்ற போராட்டத்தில் கருணாநிதி வராத ரயில் வரக்கூடிய தண்டவாளத்தின் தலை வைத்து போராட்டம் நடத்தினார். போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். ஒரு மணி நேரம் கழித்து கண்ணதாசன் அப்ப பகுதிக்கு வந்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தினார். போலீசார் அவரை அடித்து அடித்து உதைத்து ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின்பு கருணாநிதிக்கு மூன்று மாத சிறை தண்டனையும் கண்ணதாசனுக்கு 18 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் கல்லக்குடி கண்ட கண்ணதாசன் என்று சொல்ல வேண்டும். பொய்யாக பேசி அரசியலில் வரலாற்றை மாற்றி மாற்றி பேசுவது திமுகவினர் தான். 70 ஆண்டுகால ஆட்சியில் இவர்கள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திருவண்ணாமலையில் 125 நாட்கள் போராடிய விவசாயிகள் ஏழு பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்காக நாளை பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அவர்களை விடுவிக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும். அவர்கள் கேட்பது நியாயமான போராட்டம். தண்ணீர் உள்ள விவசாயப் பகுதிகளில் 3600 ஏக்கர் விலை நிலங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்பது தான் அவருடைய போராட்டம். இதுகுறித்து அமைச்சர் எ.வ வேலுவிடம் கேட்ட பொழுது தொழிற்சாலைகளை வானத்தில போயா கட்ட முடியும் என பதிலளிக்கிறார். விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை தகவல் அனைத்தும் செய்தித்தாளில் பார்த்ததாக குறிப்பிடுகிறார்” எனத் தெரிவித்தார்.