மேலும் அறிய

Diwali 2023: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், திருச்சி மாநகரில் தஞ்சாவூர் மார்க்கம், புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில், மன்னார்புரம் சர்வீஸ் ரோட்டில் தொடங்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி திறந்து வைத்தார். 

திருச்சி மாநகரில் பாதுக்காப்பு நடவடிக்கைகள : 

NSCB ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் (Temporary Police Out-Post) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் (Public Address System) மற்றும் மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் 16 CCTV கேமராக்களும், சோனாமீனா தியேட்டரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் 2 CCTV கேமராக்களும், சத்திரம்பேருந்து நிலையத்தில் 102 CCTV கேமராக்களும், மத்திய பேருந்து நிலையத்தில் 44 CCTV கேமராக்கள் உட்பட ஆக மொத்தம் 152 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டும் சட்ட ஒழுங்கு காவலர்கள், குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உட்பட திருச்சி மாநகரத்தில் சுமார் 1059 காவலர்கள் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Diwali 2023: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு

மேலும், திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் அவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பொதுமக்கள் மற்றும்  வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

1. தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது.

2. பேருந்துகளை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றவேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக் கூடாது.

3. வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக்கூடாது. 

4.  வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும்
பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது.

5. பட்டாசு வியாபாரம் செய்பவர்கள், அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் விற்பனை செய்யவேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது.

மேற்படி விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. 

மேலும் இது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண்:100-க்கும் மற்றும் மாநகர காவல் ஆணையர் அவர்களது அலுவலக Whatsapp No: 9626273399 என்ற எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம் கூறப்பட்டுள்ளது. 

Diwali 2023: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு NSCB சாலையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை கீழ்கண்ட வாகன நிறுத்துமிடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும் : 

1. பழைய குட்செட் சாலையில் FSM அருகில் உள்ள (கோட்டை இரயில் நிலையம்) இரயில்வே மைதானத்தில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தவேண்டும்.

02. மெயின்கார்டுகேட் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தவேண்டும்.

3.  சிங்காரதோப்பு செல்லும் வழியில் பூம்புகார் விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள யானைக்குளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தவேண்டும்.

4. பெரியகடை வீதி வழியாக வரும் வாகனங்களை கிலேதார் சாலை வழியாக சென்று கீழப்புலிவார் சாலையில் நிறுத்திவிட்டு வரவேண்டும்.

5. நந்திகோயில் வழியாக வரும் பொதுமக்களின் வாகனங்களை பட்டர்வொர்த் சாலையில் நிறுத்திவிட்டு வரவேண்டும்.

Diwali 2023: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் 09.11.2023ம்தேதி முதல் 14.11.2023ம்தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கீழ்கண்ட தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மார்க்கம் செல்லும் பேருந்துகள் : 

டி.வி.எஸ்.டோல்கேட் தலைமை தபால் நிலையம் - முத்தரையர் சிலை - சேவா சங்கம் பள்ளி - பென்வெல்ஸ் சாலை அலக்ஸாண்டிரியா சாலை -சோனா மீனா தியேட்டர் எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.

புதுக்கோட்டை மார்க்கம் செல்லும் பேருந்துகள் :

டி.வி.எஸ்.டோல்கேட்- சுற்றுலா மாளிகை செல்லும் பேருந்துகள் பழைய ஹவுசிங் யூனிட்-ஜ்  இலுப்பூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது. 

மதுரை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்:

மார்க்கம் மன்னார்புரம் சர்வீஸ் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து செல்லும் பேருந்துகள நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.

Diwali 2023: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு

தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து, திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள், மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.

மேலும், மற்ற வெளி ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில், எந்தவிதமாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். 

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சுற்றுப்பேருந்துகள் (Circular Buses) இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தற்காலிக பேருந்து நிலையங்களில், பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏதும் ஏற்படாவண்ணம் காவல்துறையின் பாதுகாப்பும், மாநகராட்சியின் மூலம் நிழற்குடை, குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் உடனுக்குடன் பயணிகளுக்கு தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget