மேலும் அறிய

காவிரி நீரை பெறுவதில் திமுகவுடன் சேர்ந்து காங்கிரசும் போராட்டத்தில் ஈடுபடும் - திருநாவுக்கரசர் எம்.பி

காவிரி பிரச்சனை இன்று நேற்று தொடங்கியது அல்ல, 40 ஆண்டுகளுக்கு மேல் இந்த பிரச்சனை உள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலில் எங்களை பாதிக்காது.

திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில், திருச்சி  பாராளுமன்ற  தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார். இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 22,23,24,26,27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் நேரில் வந்து குறைகளை தெரிவித்தனர்.இந்த முகாமில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ், கவுன்சிலர் சோபியா விமலா ராணி, புத்தூர் சார்லஸ், பட்டேல் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதன் பின்னர் திருநாவுக்கரசர் எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: நான் திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் நிற்கும் போது கொடுத்த வாக்குறுதிகளை முடிந்த அளவிற்கு நிறைவேற்றி உள்ளேன். மேலும் தொடர்ந்து நிலவும் பிரச்சனைகள் கொடுத்து தொகுதி முழுவதும் பொதுமக்களை சந்தித்து புகார் மனுகளை பெற்று வருகிறேன். இந்த மனுக்கள் அனைத்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கபடும். மேலும் மீண்டும் காங்கிரஸ் கட்சி திருச்சியில் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அளித்தால் நிச்சயம் போட்டியிடுவேன் என்றார். குறிப்பாக அரிஸ்டோ மேம்பாலம், தெரு விளக்குகள், சாலை வசதிகள் என நாடாளுமன்ற உறுப்பினராக என்ன முடிந்தவரை திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். 

காவிரி நீரை பெறுவதில் திமுகவுடன் சேர்ந்து காங்கிரசும் போராட்டத்தில் ஈடுபடும் -  திருநாவுக்கரசர் எம்.பி

மேலும், காவிரி பிரச்சனை என்பது இன்று, நேற்று தொடங்கியது அல்ல, கடந்த 30 ஆண்டுகளாக இந்த பிரச்சனை ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. மேலும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் மிக சிறப்பான திட்டமாகும். இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வருகின்ற தேர்தலில் புதிய கட்சிகள் இணைவது குறித்து தேர்தல் நேரத்தில் தான் தெரியும். காவிரி நீரை பெறுவதில் திமுகவுடன் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களில் பங்கெடுக்கும். எந்த அரசியல் கட்சியாலும் காவிரி பிரச்சினையை பேசி தீர்க்க முடியாது. உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சட்டப்படியான தீர்ப்பின் அடிப்படையில்  மட்டுமே காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். தேர்தல் காலத்தில் திருச்சி மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், எனக்கு ஒடுக்கப்பட்ட நிதி ஆதரத்தைக்கொண்டு நிறைவேற்றி இருக்கிறேன். காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் காலம் காலமாக இருந்து வருகிறது. அப்பிரச்சனை வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த விதத்திலும் பிரதிபலிக்காது வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைமை வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன். இவ்வாறு பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget