மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. ஒரு சில சுயேட்ச்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாள் என்பதால் சுயேட்ச்சை வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சியினர் யாரும் தாக்கல் செய்யவில்லை. பிரதான கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீட்ட பிறகு தான் வேட்பு மனுக்களை தக்கல் செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர்.  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அனைத்து மாநகராட்சிகள்,  நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான  தேர்தல்கள் குறித்த அறிவிப்பை கடந்த 26-ந்தேதி வெளியிட்டது.  இதன்படி திருச்சி மாவட் டத்தில், திருச்சி மாநகராட்சி, மணப்பாறை,   துவாக்குடி, துறையூர்,  லால்குடி,  முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர்,  கூத்தைப்பார்,  மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர், ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி இன்று (28-ந் தேதி) முதல் பிப்ரவரி 4-ந் தேதி வரை (ஞாயிறு நீங்கலாக) வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. 
 

திருச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

மேலும் திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள், லால்குடி நகராட்சியில் 24, முசிறி நகராட்சியில் 24, மணப்பாறை நகராட்சியில் 27, துறையூர் நகராட்சியில் 24, துவாக்குடி நகராட்சியில் 21 வார்டுகள் என்று 5 நகராட்சிகளில் 120 வார்டுகள் உள்ளன. இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், எஸ்.கண்ணணூர், சிறுகமணி, தாத்தையங்கார் பேட்டை, தொட்டியம், உப்பிலியாபுரம் ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள், கூத்தப்பர், மண்ணச்சநல்லூர் பேரூராட்சிகளில் தலா 18 வார்டுகள் என்று மொத்தம் 14 பேரூராட்சிகளில் 216 வார்டுகள் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 20 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 401 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு, பொன்லை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்கள் என்று 4 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

இதனை தொடர்ந்து மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி நகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தப்பார், மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், எஸ்.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியாபுரம் ஆகிய 14 பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் அந்தந்த அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிவராசு தெரிவித்துள்ளார். மேலும்  வேட்பு மனு தாக்கல் படிவங்களை இணைதளத்திலும், அந்தந்த அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வேட்பு மனுவினை தாக்கல் செய்பவர் மற்றும் முன்மொழிபவர் என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  இரு வாகனங்களுக்கு  மேல் அனுமதி  இல்லை.   தேர்தல் ஆணையத்தின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும், கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களையும்,  வேட்பாளர்கள் பின்பற்றிட வேண்டும்.   மேற்கண்ட  தகவலை மாவட்ட தேர்தல்அலுவலரும், மாவட்ட ஆட்சியர்  சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget