சீரற்ற இதய துடிப்பு பிரச்சினைகளுக்கு 3D முறையில் அதி நவீன சிகிச்சை - திருச்சியில் மருத்துவர்கள் அசத்தல்!
சீரற்ற இதய துடிப்பு பிரச்சினைகளுக்கு அதி நவீன சிகிச்சை முறையில் சிறப்பான தீர்வு கண்டு திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
![சீரற்ற இதய துடிப்பு பிரச்சினைகளுக்கு 3D முறையில் அதி நவீன சிகிச்சை - திருச்சியில் மருத்துவர்கள் அசத்தல்! Best solution for Irregular heart beat problems with state of the art treatment in 3D trichy apollo சீரற்ற இதய துடிப்பு பிரச்சினைகளுக்கு 3D முறையில் அதி நவீன சிகிச்சை - திருச்சியில் மருத்துவர்கள் அசத்தல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/15/f1f4dbf0dd8df4e4d169bb48eadc8f3f1697341379815184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி மாநகர், பழைய பால்பண்னை பகுதியில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த எலெக்ட்ரோபிசியாலஜி துறை டாக்டர் விஜயசேகர் பேசியது, "சீரற்ற அதீத இதயதுடிப்பு பிரச்சினைகளால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் நோயாளிகளை அதிநவீன சிகிச்சை முறையின் மூலம் குணப்படுத்தி திருச்சி அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இதற்கு அப்போலோ மருத்துவமனையின் எலக்ட்ரோபிசியாலஜி துறை காரணமாக உள்ள மருத்துவர்கள் இந்த சாதனை படைத்துள்ளனர்.
சீரற்ற இதயத்துடிப்பு:
குறிப்பாக திருச்சி, டெல்டா மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த எளிய மக்களுக்கும் இதய பிரச்சினைகளுக்கு உலக தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் திருச்சி அப்போலோ மருத்துவமனையின் எலெக்ட்ரோபிசியாலஜி துறை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார். மேலும் ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் என குறிக்கப்படுவது சீரற்ற அதீத இதய துடிப்பு கொண்ட ஒரு நிலையாகும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு படபடப்பு, மூச்சு திணறல், மயக்கம் அடிக்கடி ஏற்படும். சிலருக்கு பக்கவாதம் வரும் அபாயமும் உள்ளது. இத்தகைய பிரச்சினைகளை குணப்படுத்துவதில் தான் சிறப்பான பணியை எலெக்ட்ரோபிசியாலஜி துறை செய்துவருகிறது.
மேலும், சமீபத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக சீரற்ற அதீத இதய துடிப்பால் (AF) அவதிப்பட்டு வந்த ஒரு பெண்ணுக்கு இந்த சிகிச்சை ( Pulmonary Vein isolation) அளிக்கப்பட்டு குணமடைந்தார். அவர் மூன்றே நாட்களில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. எலக்ட்ரோபிசியாலஜி துறை மருத்துவர்களுக்கு பெருமிதம் தரும் தருணமாக அமைந்தது. திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதல்முறையாக தொழில்நுட்பத்தை (3 D mapping Radio frequency ablation Pulmonary Vein isolation) பயன்படுத்தி நுண்துளை முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அந்தப் பெண் குணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
500க்கும் மேற்பட்ட நோயாளிகள்:
கடந்த மாதங்களில், பல்வேறு இதய பிரச்சினைகளுடன் அனுமதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட நோயாளிகளை நவீன சிகிச்சை முறைகள் வாயிலாக எலெக்ட்ரோபிசியாலஜி துறை மருத்துவர்கள் குணமடையச் செய்துள்ளார். அதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு Radiofrequency Ablation என்னும் கதிரியக்க சிகிச்சை மூலம் இதய துடிப்பு கோளாறுகள் சீர் செய்யப்பட்டிருக்கிறது என்றார். இதய நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை அனுகி உரிய பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க அனைவரும் குறைந்த பட்சம் 8 மணி நேரம் தூங்கம் வேண்டும், சத்தான உணவை எடுத்துகொள்ள வேண்டும், தினமும் நடைபயிற்ச்சி மேற்கொள்வது அவசியம் என தெரிவித்தார்.
மேலும், உலகத் தரம் வாய்ந்த அதிநவீன எலெக்ட்ரோபிசியாலஜி சேவைகளை திருச்சி, டெல்டா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறிமுகப்படுத்தி அவர்களின் இதய பிரச்சினைகளை சரி செய்வதிலும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் திருச்சி அப்போலோ மருத்துவமனை முன்னோடியாக திகழ்வது பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிப்பதாக திருச்சி அப்போலோ மருத்துவமனை மூத்த நிர்வாகி V. ஜெயராமன் பெருமிதம் தெரிவித்தார். மருத்துவமனை நிர்வாகி டாக்டர் சிவம், எலெக்ட்ரோபிசியாலஜி துறை டாக்டர் விஜயசேகர், மூத்த இதயவியல் நிபுணர்கள் டாக்டர் காதர், டாக்டர் ஷியாம் சுந்தர், டாக்டர் ரவீந்திரன், மயக்கவியல் டாக்டர் ரோகிணி மயூர் பாலாஜி, டாக்டர் சரவணன் ஆகியோர் Radiofrequency Ablation செயல் முறைகள் குறித்து விளக்கிப் பேசினர். செயல்பாட்டு பொது மேலாளர் சங்கீத் மற்றும் மார்கெட்டிங் பிரிவு அனந்த ராம கிருஷ்ணன் உடனிருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)