மேலும் அறிய

துப்பாக்கி சுடும் போட்டி: 25, 50 மீட்டர் பிரிவுகளில் இலக்கை நோக்கி சுட்ட நடிகர் அஜித்

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று இலக்கை நோக்கி சுட்டார். அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கியது. இந்த போட்டி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் சுடுதளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம்பிரிக்கப்பட்டு சப்-யூத் 16 வயது வரை, யூத் 19 வயது வரை, ஜூனியர் 21 வயது வரை, சீனியர் 21 முதல் 45 வயது வரை, மாஸ்டர் 45 முதல் 60 வயது வரை மற்றும் சீனியர் மாஸ்டர் 60 வயதுக்கு மேல் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பிரபல திரைப்பட நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சி வந்தார். நேற்று காலை அவர் கே.கே.நகரில் உள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றார். அங்கு போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அவரை வரவேற்று போட்டியில் பங்கேற்க வைத்தனர். 25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய 2 பிரிவுகளிலும் அஜித்குமார் பங்கேற்று இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க நடிகர் அஜித்குமார் திருச்சி வந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் நேற்று காலை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் திரண்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்று போட்டியிலும் பங்கேற்றுவிட்டு அஜித்குமார் வெளியே வந்தபோது, ரைபிள் கிளப் வெளியே குவிந்து இருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.


துப்பாக்கி சுடும் போட்டி: 25, 50 மீட்டர் பிரிவுகளில் இலக்கை நோக்கி சுட்ட நடிகர் அஜித்

மேலும் ரசிகர்களை பார்த்து இருகட்டை விரல்களை தூக்கி வெற்றி பெற்றது போன்ற சைகை செய்தார். இதை கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் அஜித்குமாரை செல்போன்களில் படம் பிடித்தனர். மேலும், ஒரு சில ரசிகர்கள் ஆர்வத்துடன் ரைபிள் கிளப்பில் போட்டி நடைபெறும் அரங்கிற்குள் நுழைந்தனர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அஜித்குமாருடன் செல்பி எடுத்து கொள்ள போட்டி போட்டு முண்டியடித்ததால் அங்கு லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்று ஒரு அறையில் அமர வைத்தனர். அதன்பிறகு சிறிதுநேரம் கழித்து அவர் வெளியே வந்து மீண்டும் அடுத்த சுற்று போட்டியில் பங்கேற்றார். திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித்குமார் பங்கேற்றுள்ள தகவலை அவரது ரசிகர்கள் வாட்ஸ்அப் மூலம் அனைத்து குழுக்களிலும் பரப்பி வருகிறார்கள். இதையொட்டி அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தகுதி சுற்றுக்கு முன்னேறுபவர்கள் தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க முடியும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Trichy power cut (18-07-2026): நாளை திருச்சியில் மின்தடை! உங்க ஏரியாவில் கரண்ட் இருக்குமா? உடனே செக் பண்ணுங்க
நாளை திருச்சியில் மின்தடை! உங்க ஏரியாவில் கரண்ட் இருக்குமா? உடனே செக் பண்ணுங்க
Trichy power cut: திருச்சியில் மின்தடை அறிவிப்பு: நாளை (14-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
திருச்சியில் மின்தடை அறிவிப்பு: நாளை (14-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
பிளம்பர்கள் பற்றாக்குறை... தண்ணீருக்காக தவிக்கும் திருச்சி: அதிகாரிகள் மெத்தனம்?
பிளம்பர்கள் பற்றாக்குறை... தண்ணீருக்காக தவிக்கும் திருச்சி: அதிகாரிகள் மெத்தனம்?
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
MG Motor NEV Architecture: டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
Best Speed for Car Mileage: ‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
Vanni Arasu:
Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!
Embed widget