மேலும் அறிய

மனநிலை பாதிக்கபட்ட மகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தாய் கைது

திருச்சியில் மனநிலை பாதித்து தொல்லை கொடுத்து வந்த மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய தாய் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார்.

திருச்சி உறையூர் சீனிவாசன் நகர் 7 வது மெயின் ரோடு 10வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் இவருடைய மனைவி புனிதா (58) இவர்களுக்கு சாந்தினி என்ற மகளும் விஜயராகவன் (27) என்ற மகனும் உள்ளனர் கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் பத்மநாபன் இறந்துள்ளார். இதனை தொடர்ந்து விஜயராகவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார்.  இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. 7 மாதங்கள் ஒரு மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக தில்லை நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டில் அவரும் தாய் புனிதா மட்டுமே இருந்துள்ளனர். இந்த  நிலையில் இரவு விஜயராகவன் அவரது தாயாரும் அறையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்,  அதிகாலை 5 மணி அளவில் விஜயராகவன் திடீரென எழுந்து தனது தாயாரை வெளியே சென்று படுக்கும் படி கூறியுள்ளார் அவரும் ஹாலுக்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். பின்பு  சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று கதவை திறந்துள்ளார்,  அங்கு விஜயராகவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். 


மனநிலை பாதிக்கபட்ட மகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தாய் கைது

மேலும் அவரின் தலையில் கத்தியால் மூன்று முறை ஆழமாக குத்தப்பட்டு காயம் இருந்ததும் இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் புனிதா உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் விஜயராகவனை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து உள்ளார் என்பதை தெரிவித்துள்ளனர்.  உடனடியாக உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் விரல்ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்..பின்னர் விஜயராகவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரோ என்ற கோணத்தில் அவரது தாயிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்டு விஜயராகவன் ஏற்கனவே இது இதுபோன்று ஏழு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார், தற்போது எட்டாவது முறையாக கத்தியால் பின்னந்தலையில் குத்தி தற்கொலை செய்து கொண்டு உள்ளார் என்பது தெரியவந்தது. இந்நிலையில்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்..


மனநிலை பாதிக்கபட்ட மகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தாய் கைது

இந்நிலையில் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனையில் விஜயராகவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, தலையில் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையிடம் அறிக்கை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர்  விஜயராகவனின் தாய் புனிதா மீது சந்தேகப்பார்வை விழுந்தது. தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் மகனை கொன்று விட்டு தாய் நாடகமாடியது அம்பலம் ஆனது. இதையடுத்து புனிதாவை கைது செய்த காவல்துறையினர்  நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்கு மூலத்தில்,  தன்னுடைய மகன் விஜயராகவன் கடந்த சில தினங்களாக தனக்கு பல்வேறு ரீதியில் தொல்லை கொடுத்து வந்ததால் நான் தான் அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட புனிதா திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை
திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை
திருட்டு அச்சம் அதிகரிப்பு... ராக்கின்ஸ் சாலையில் உடனடியாக தெருவிளக்குகளை சீரமைக்க கோரிக்கை
திருட்டு அச்சம் அதிகரிப்பு... ராக்கின்ஸ் சாலையில் உடனடியாக தெருவிளக்குகளை சீரமைக்க கோரிக்கை
Trichy power cut: திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க
திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
Embed widget