மேலும் அறிய
Advertisement
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 8,303 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது பள்ளி மானவ, மாணவிகளுக்கு நேற்று ஒரேநாளில் 8,303 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்கத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வருகிறது. அதே சமயம் வரும் ஜீன் மாதம் இறுதியில் கொரோனா 4 ஆவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாக சுகாதரதுறை அதிகரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தி உள்ளது மாநில அரசு. கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கு, 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முதலமைச்சர் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு கோர்பிவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கியது.
இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பள்ளிகள், 39 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 41 பள்ளிகள், 29 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த 12 முதல் 14 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை கலெக்டர் ரமணசரஸ்வதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி முன்னிலையில் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
அதே போல் பெரம்பலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் 12 முதல் 14 வயது வரையில் 7, 8, 9-ம் வகுப்புகள் பயிலும் மாணவ-மாணவிகள் மொத்தம் 22,100 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 24,800 மாணவ-மாணவிகளுக்கும் சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதில் முதல் நாளான நேற்று நடந்த முகாம்களில் அரியலூர் மாவட்டத்தில் 2,273 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 5,030 பேருக்கும் என மொத்தம் 8,303 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த உள்ளனர். எனவே, மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை செயல்படுத்திட சுகாதார துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. முதல் தவணை கோர்பிவேக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 12 முதல் 14 வயது வரையிலான மாணவ மாணவிகள் 4 வாரங்களுக்கு பிறகு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion