மேலும் அறிய

திருச்சி அருகே 50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கைது - போலீசார் நடவடிக்கை

திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை அருகே லாரியில் இருந்த ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 5 பேர் அதிரடியாக கைது..

திருச்சி மாவட்டம்,  பெட்டவாய்த்தலை,  காவல்காரபாளையம் பகுதியில் உள்ள ஜிகே டிபன் சென்டர் அருகே கடந்த 3ஆம் தேதி கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி இறக்கி விட்டு திரும்ப வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரியை நிறுத்திவிட்டு லாரி டிரைவர் ஆனந்த் மற்றும் உடன் வந்த லோகேஸ்வரன் ஆகிய இருவரும் தேநீர் அருந்த சென்றனர். 

மேலும் சிறிது நேரம் கழித்து  லாரி டிரைவர் ஆனந்தும், லோகேஸ்வரனும் தேநீர் அருந்திவிட்டு லாரிக்கு சென்றனர். அப்போது லாரியில் இருந்து அடையாளம் தெரியாத 3 நபர்கள் அரிவாளுடன் இறங்கி ஓடியுள்ளனர்.

உடனே, அவர்களை  இருவரும் விரட்டி சென்றனர். அப்போது  சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். உடனடியாக லாரி டிரைவர் ஆனந்தும், லோகேஸ்வரனும் ஓடி சென்று லாரியின் உள்ளே பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

கும்பகோணத்தில் காய்கறி லோடு இறக்கிவிட்டு வாங்கி வைத்திருந்த ரூ.50,68,200 பணத்தை,  தப்பி சென்ற மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டது தெரிய வந்தது.

திருச்சி அருகே 50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கைது - போலீசார் நடவடிக்கை

திருச்சி அருகே லாரியில் இருந்த ரூ.50 லட்சம் கொள்ளை..

மேலும் இச்சம்பவம் தொடர்பாக பெட்டாவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்,  உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) கோடிலிங்கம் அவர்களின் மேற்பார்வையில், ஜீயபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  பாலசந்தர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று முந்தினம்  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அலுவலக உதவி எண்ணிற்கு நவலூர் குட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் காரில் சுற்றி திரிவதாக  ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார், நவலூர் குட்டப்பட்டு அரியாற்று பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்ருந்த காரின் அருகே சென்றனர். அப்போது  காரில் இருந்த மர்ம நபர்கள் தப்பிக்க முயன்ற 5 நபர்களையும் தனிப்படை போலீசார்  சுற்றி வளைத்து கைது செய்தனர்.

திருச்சி அருகே 50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கைது - போலீசார் நடவடிக்கை

ரூ.50 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது - போலீசார் நடவடிக்கை..

பின்னர் 5 நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது , இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பிரவீன் குமார், போஸ் என்ற  இசக்கிமுத்து,  வெள்ளை பாண்டி, முத்து மணிகண்டன், சூர்யா என்ற உதயநிதி ஆகிய 5  நபர்கள் என தெரியவந்தது. 

தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் ரூ. 50 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரியில் இருந்து ரூ. 26,00,000 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.இதனை தொடர்ந்து, குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய காரை கைப்பற்றி, குற்றவாளிகள் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தீவிரமாக தனிப்படை போலீசார்  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs RCB LIVE: 16 ஆண்டுகள்.. கோலி vs தோனி.. தோல்வியே சந்திக்காத CSK! வரலாற்றை மாற்றுமா ராயல் சேலஞ்சர்ஸ்.. நேரலை
CSK vs RCB LIVE: 16 ஆண்டுகள்.. கோலி vs தோனி.. தோல்வியே சந்திக்காத CSK! வரலாற்றை மாற்றுமா ராயல் சேலஞ்சர்ஸ்.. நேரலை
Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Admk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs RCB LIVE: 16 ஆண்டுகள்.. கோலி vs தோனி.. தோல்வியே சந்திக்காத CSK! வரலாற்றை மாற்றுமா ராயல் சேலஞ்சர்ஸ்.. நேரலை
CSK vs RCB LIVE: 16 ஆண்டுகள்.. கோலி vs தோனி.. தோல்வியே சந்திக்காத CSK! வரலாற்றை மாற்றுமா ராயல் சேலஞ்சர்ஸ்.. நேரலை
Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
"பெங்கால் புலி நானு.. முடிஞ்சா பிடிச்சு பாருங்க" இடதுசாரி மாணவர்களை கதறவிட்ட மம்தா!
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Embed widget