மேலும் அறிய

திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்த ரூ.120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் மொத்தம் 18 ரயில் நிலையங்களும் கேரளாவிற்கு 5 ரயில் நிலையங்களும் கர்நாடகாவில் ஒன்றும் புதுச்சேரியில் ஒன்றும் என மொத்தம் 25 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் கூறியது: நாடு முழுவதும் உள்ள 500 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி மேம்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து அதற்கான அடிகல்லையும் நாட்டியுள்ளார். அதில் தென்னக ரயில்வேயில் உள்ள 25 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்க உள்ளது.  இந்திய ரயில்வே தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக நவீன மயமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு மூன்று ரயில் நிலையங்கள் அதிகப்படியான மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மத்திய பிரதேசத்தில் உள்ள ராணிகமலாபதி, பெங்களூர் விஸ்வரேஸ்சய்யா ரயில் நிலையம், குஜராத் காந்திநகர் ரயில் நிலையம் ஆகியவை நவீன மயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1309 ரயில்கள் நவீன மயமாக்கப்பட உள்ளன.
அதில் திருச்சி கோட்டத்தை பொருத்தவரை 15 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, திருப்பாதிப்புலியூர், சிதம்பரம், அரியலூர், திருவண்ணாமலை, விருத்தாச்சலம், வேலூர், கண்டோன்மென்ட், போளூர், லால்குடி ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 6ஆம் தேதி இந்த அம்ரித் பாரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட அளவில் 4 ரயில் நிலையங்கள் இணைக்கப்படுகிறது. அதில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகியவை இணைக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையங்கள் அனைத்திலும் வெளிநாடுகளில் இருப்பது போல் மேம்படுத்த பட உள்ளோம். அதில் நகரின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையிலும், ரயில் நிலையங்களின் கட்டிடங்களை மேம்படுத்தி மறு வடிவமைப்பு செய்தல்,  நவீன வசதிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகளின் வழிகாட்டுதலுக்கான சைன் போர்டு அமைக்கப்பட உள்ளது. நம்ம ஊரின் கலாச்சாரம் பண்பாடை குறிக்கும் வகையில் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக பிரதமர் மோடி 508 ரயில் நிலையங்களுக்கு பணிகளை தொடங்கி வைக்கிறார். திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 15 ரயில் நிலையங்களுக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 18 ரயில் நிலையங்களும் கேரளாவிற்கு 5 ரயில் நிலையங்களும் கர்நாடகாவில் ஒன்றும் புதுச்சேரியில் ஒன்றும் என மொத்தம் 25 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் பாண்டிச்சேரி மட்டும் 93 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் வணிக பிரிவு மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget