ஆவணங்கள் இன்றி ரயில் எடுத்து வரப்பட்ட 115.75 சவரன் தங்கம் - பயணிக்கு 2.66 லட்சம் அபராதம்
காரைக்கால்-திருச்சி டெமு ரெயிலில் 115.75 பவுன் தங்கநகையை ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த மதுரை வியாபாரிக்கு வருமான வரித்துறையினர் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 466 அபராதமாக விதித்தனர்.
திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக போதை பொருட்களான கஞ்சா, போதை மாத்திரை, ஊசி, மதுமானம், கள்ளச்சாராயம் போன்றவற்றை கார், லாரி, மூலமாக தொடர்ந்து கடத்தப்பட்டு வரும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இவற்றை முற்றிலுமாக கட்டுபடுத்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் கஞ்சா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்பட்டு கடந்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. மேலும் அண்டை மாநிலத்தில் இருந்து ரயில் மூலமாக தங்கம், கஞ்சா, உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான முறையில் கடத்தல் நடந்து வருவதாக தமிழக ரயில்வே துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அனைத்து இரயில்வே கோட்டங்களிலும் பாதுகாப்பு, சோதனைகள் தீவிரபடுத்தபட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் சின்னத்துரை மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் தெய்வேந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் காவல்துறை மணிமாறன், பிரபு அடங்கிய குழுவினர் ரெயில்களில் சட்டவிரோதமான செயல்களை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி ரயில் நிலையத்தில் வரும் பயணிகளின் உடமைகள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்த பிறகு நிலையத்திற்குள் அனுமதியளித்து வருகிறார். குறிப்பாக சந்தேகம்படும்படி யாராவது சுற்றி திறிந்தால் அவர்களை அழைத்து விசாரனை நடத்தபட்டு வருகிறது. தொடர்ந்து 24 மணி நேரமும் ரயிவே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காரைக்காலில் இருந்து திருச்சி வந்த டெமு ரெயிலில் இந்த குழுவினர் சோதனை செய்த போது, ஒருவர் கருப்புநிற பையில் நகைகளை வைத்து இருந்தார். விசாரணையில், அவர் மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்த சந்திரசேகர் (55) என்பதும், நகை வியாபாரியான அவர், காரைக்காலில் இருந்து 44 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான 115.75 பவுன் நகைகளை விற்பனைக்காக வாங்கி செல்வதும் தெரியவந்தது. விசாரணையில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
பின்பு நகையை கைப்பற்றிய பாதுகாப்பு படை காவல்துறையினர், அவற்றை திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுபற்றி வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள மாநில வரி அலுவலர் செல்வம், துணை மாநில வரி அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். மேலும் ஆவணங்கள் இன்றி நகைகளை எடுத்து சென்றதற்காக சந்திரசேகருக்கு ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 466 அபராதம் விதித்தனர். அவர் அந்த தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்தியதை தொடர்ந்து நகைகள் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இத்னை தொடர்ந்து சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.