மேலும் அறிய

ஒரு நபருக்கு ரூ.1000; மாநாட்டிற்கு பணம் கொடுத்து அழைக்கும் அதிமுக - டி.டி.வி தினகரன்

ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்வோம் என மக்களை ஏமாற்றும் விதமாக தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள் - டி.டி.வி தினகரன் பேட்டி

திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தனியார் மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பேசியது: நானும் ஓ.பி.எஸ் இணைந்து இனி வரும் காலங்களில் அரசியலில் பயணிப்போம். மேலும் பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இருக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் அ.ம.மு.க இணையுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் என்றார். சசிகலா தொண்டர்களுக்கு புதிய விடியல் ஏற்படும் என கடிதம் எழுதி உள்ளது குறித்து கேள்விக்கு அவரிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியின் தவறான ஆட்சி முறையால்  மக்கள் கொதிப்படைந்து எதிர்ப்பை காட்ட  2019 ஆம் ஆண்டும், 2021 ஆம் ஆண்டும் தி.மு.க விற்கு வாக்களித்தார்கள்.  ஆனால் இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் ஸ்டாலின் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். அதனால் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தி.மு.க வை எதிர்த்து மக்கள் வாக்களிக்கும் தேர்தல். அந்த தேர்தலில் தி.மு.க வையும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிராக மக்கள் அ.ம.மு.க விற்கு ஆதரவளிப்பார்கள் என்றார்.

ஒரு நபருக்கு ரூ.1000; மாநாட்டிற்கு பணம் கொடுத்து அழைக்கும் அதிமுக - டி.டி.வி தினகரன்

மேலும், "ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்வோம் என மக்களை ஏமாற்றும் விதமாக தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள். 2021 ஆம் ஆண்டு இருந்த நிலையில் எந்த வாக்குறுதி அளிக்காவிட்டாலும் தி.மு.க ஆட்சிக்கு வந்திருப்பார்கள். ஆனால் தி.மு.க வின் குணாதிசயமே மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவது தான். அவர்களின் தவறான நடவடிக்கையால் தி.மு.க தீய சக்தி என்பது தெரிகிறது. தி.மு.க ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் கர்நாடக அரசுக்கு தைரியம் வந்து விடும். தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க பார்ப்பார்கள். காவேரி விவகாரத்தில் மத்திய அரசு நியாயமான உரிமையை தமிழ்நாட்டிற்கு பெற்று தர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்த காலத்தில் ஈட்டிய செல்வத்தை கொண்டு மக்களையெல்லாம் அள்ளி செல்லலாம் என பார்க்கிறார்கள். 250 கோடிக்கு மேல் மக்களுக்கு பணத்தை வாரி வழங்கும் நல்ல வேலையை செய்கிறார்கள். எல்லா பகுதிகளிலும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் இன்ன பிற வசதிகளை கொடுத்து மக்களை அழைக்கிறார்கள். ஆனால் மக்கள் செல்வார்களா என தெரியாது. மக்கள் கூட்டம் தானாக கூடாத வகையில் அந்த மாநாடு வெற்றி தராது.

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க வை கபளிகரம் செய்துள்ளார்கள். அதை ஜனநாயக முறையில் மீட்க வேண்டும் என்கிற நோக்கில் தான்  அ.ம.மு.க உருவாக்கப்பட்டது. நாங்கள் உறுதியாக போராடி அ.தி.மு.க வை ஜனநாயக ரீதியாக மீட்டெடுப்போம். அ.ம.மு.க சார்பிலும் மாநாடு நடத்தப்படும். ஆனால் உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள். அப்பொழுது தெரியும் யார் உண்மையான தொண்டர்கள் என்பது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Fengal Cyclone LIVE:  புயல் எதிரொலி! சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசம்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி! சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசம்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களே... உங்களுக்குத்தான் இந்த முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா?
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களே... உங்களுக்குத்தான் இந்த முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா?
IND vs AUS: ஆஸி.யை தூசியாக்குமா இந்தியா? 150 ஆண்டுகள் பழமையான அடிலெய்ட் மைதானம் எப்படி?
IND vs AUS: ஆஸி.யை தூசியாக்குமா இந்தியா? 150 ஆண்டுகள் பழமையான அடிலெய்ட் மைதானம் எப்படி?
Embed widget