மேலும் அறிய
Today Headlines: தமிழ்நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை.. இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையில் 3வது ஒருநாள் போட்டி..இன்னும் பல!
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு :
- சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி 25 கட்சிகள் 44 இயக்கங்கள் இணைந்து நடத்தும் மனித சங்கிலி போராட்டம் சென்னையில் இன்று மாலை 4.00 மணிக்கு நடக்கிறது.
- இந்தியை கட்டாயமாக்கி மீண்டும் ஒரு மொழிப் போரினை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என சபாநாயர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை – அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- 14 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் எச்சரிக்கை
-
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 316 பேரிடம் தனிப்படை போலீசார் நடத்திய வாக்குமூலங்கள்,கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என 1500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி உதகை மாவட்ட அமர்வு நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
- சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
- பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் நேற்று வயது மூப்பின் காரணமாக காலமானார். முதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
- தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக 16,888 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை முடிவு செய்துள்ளது.
இந்தியா:
- உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதாவ் நேற்று காலமானார்.
- உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதாவ் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், ராகுல் காந்தி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
- உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதாவ் மறைவுக்கு, அம்மாநில அரசு மூன்று துக்கம் அனுசரிக்கும் என அறிவித்துள்ளது.
உலகம் :
- உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு ஐ.நா சபை கண்டனம். உக்ரைன் அதிபர் ஜி7 நாடுகளுடன் உக்ரைன் அதிபர் இன்று ஆலோசனை.
- பிரிட்டனில் ஊபரில் 15 நிமிட பயணத்துக்கு 32 லட்சம் கட்டணம் காட்டியதில் பயணி அதிர்ச்சி.
விளையாட்டு :
- தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில் தொடரை வெல்லும் போட்டியாக இது உள்ளது.
- பெண்களுக்கான ஆசிய கோப்பை போட்டியில் தாய்லாந்து அணியை 37 ரன்களில் சுருட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
- இந்திய வீராங்கணை ஸ்மிருதி நேற்று நடந்த போட்டியின் மூலம் ஐசிசி டி20 போட்டிகளில் 100 போட்டிகளில் விளையாடிய வீராங்கணை எனும் சிறப்பினை பெற்றுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















