மேலும் அறிய

300 ஆண்டுக்கு முன் மக்களுக்காக தர்ம சத்திரம் கட்டிய தலைவன் கல்வெட்டு  கண்டுபிடிப்பு

தச்சம்பட்டில் சுமார் 300 ஆண்டுக்கு முன் தர்ம சத்திரம் கட்டி மக்கள் பணி செய்தார் ஒரு ஊர் தலைவன், 100 ஆண்டுக்கு முன் பயணிகளுக்கு தங்குமிடம் கட்டிக் கொடுத்துள்ளார் ஒரு வெள்ளக்கார கலெக்டர்.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி. பழனிசாமி, தண்டராம்பட்டு ஸ்ரீதர் ஆகியோர்கள் கள ஆய்வு செய்யும் போது திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது. 

இதுகுறித்து மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த ச.பாலமுருகனிடம் பேசுகையில், 

இந்த மூன்று கல்வெட்டுகள் ஒரு கலவையான, அதே நேரம் சுவாரஸ்யமான பல செய்திகளை தருகின்றது. தச்சம்பட்டு முருகன் கோயில் அருகே உள்ள குளத்தின் கரையில் இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று ஒரு குறுநில தலைவனும் அவருடைய மனைவியும் உள்ள சிற்பம் அதன் கீழ் 3 வரிக்கல்வெட்டு, அருகில் உள்ள பலகையில் மற்றொரு கல்வெட்டு, மணலூர்பேட்டை சாலையின் ஓரம் ஒரு ஆங்கில கல்வெட்டு இருந்தது. இந்த கல்வெட்டுகளில் குறுநில தலைவன் என்று கருதப்படுகிற ஆண்,பெண் உள்ள சிற்பம் கீழ் உள்ள கல்வெட்டில், மனலூர்ப்பேட்டையிலிருக்கும் கெங்கை கோத்திறம் என்று உள்ளது. அருகில் உள்ள பலகைக்கல்வெட்டில் கிருஷ்ணப்ப நாயக்கர், பெண் ஜாதி சூப்பச்சியம்மனுக்காக பச்சையம்மாள் மகன் முனியகண்ணன் கொளமும் தற்ம சத்திரமும் கட்டியதாக குறிப்பிடுகிறது.

300 ஆண்டுக்கு முன் மக்களுக்காக தர்ம சத்திரம் கட்டிய தலைவன் கல்வெட்டு  கண்டுபிடிப்பு

350 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு 

இந்த இரண்டு கல்வெட்டுகளும் சுமார் 350 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். சாலையின் அருகில் உள்ள ஆங்கில கல்வெட்டையும் படியெடுத்தபோது அதில், KNAPP REST HOUSE for Travellers & Animals in honour of Our popular Collector A.R. KNAPP Esqn ICS நாப்பு துரை விடுதி - என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்ததில் நாப்பு துரை என்பவர் அப்போதைய தென்னார்காடு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் (1909-1910) அவர் இங்கிலாந்தில் உல்ஸ்டனில் 1870 இல் பிறந்தவர். மாவட்ட ஆட்சியர் உட்பட் பல்வேறு பணிகளை இந்தியாவில் செய்து வருவாய் துறை (Board of Revenue) இல் செயலாளராக இருந்தார். மெட்ராஸ் எம்.எல்.சி யாக இருந்தவர் இறுதியாக 1954 இல் இறந்துபோனார். இவர் காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு வகுத்துள்ளார் போலும் அதனால்தான் அவரை இங்கு போற்றும் விதமாக கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. நாப்பு துரை இந்த கல்வெட்டில் திருவண்ணாமலையில் இருந்து மணலூர் பேட்டை வழியாக செல்லும் பயணிகளின் நலனுக்காக தங்குமிடத்தை கட்டியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க செய்தி வெறும் பயணிகளுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் அந்த தங்குமிடத்தில் இடமுண்டு. இது அந்த மாவட்ட ஆட்சியர் தர்ம செயல்பாட்டை எடுத்துரைக்கிறது.

LIVE | Kerala Lottery Result Today (27.08.2024): கேரளா லாட்டரி : ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430.. முதல் பரிசு ரூ. 75 லட்சத்தை தட்டி தூக்குபவர் யார்?

300 ஆண்டுக்கு முன் மக்களுக்காக தர்ம சத்திரம் கட்டிய தலைவன் கல்வெட்டு  கண்டுபிடிப்பு

300 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு தர்மசக்கரம் கட்டிய தலைவன் கல்வெட்டு 

இந்த மாவட்ட ஆட்சியரின் மற்றொரு தர்மசெயலும் அதன் தடயமும் திருவண்ணாமலையில் உள்ளது. திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலக சுற்றுச் சுவரின் அருகில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு கல் இருந்தது. அதில் இதே நாப்பு துரை குறித்த கல்வெட்டு வெட்டப்பட்டிருந்தது. அது, KNAPP PATH in honour of our popular collector A R KNAPP Esq ICS நாப்பு துரை பாதை 1909 -தாசில்தார்/சேர்மேன் தாஜுதீன் சாகிப், எ. ராஜன், LFO என்று உள்ளது. இந்த கல்வெட்டு இருந்த நாப்பு சாலை என்பது தற்போது திருவண்ணாமலை திண்டிவனம் சாலையாக உள்ளது. அதற்கு நாப்பு சாலை என்று 1909 இல் பெயர் வழங்கப்பட்டதை அறியமுடிகிறது. தற்போது அந்த கல்வெட்டு இல்லை. பாலம் கட்டும்போது புதைத்து விட்டதாக அறியமுடிகிறது. இந்த இரண்டு நாப்பு துரை கல்வெட்டிலும் in hounour of our popular collector என்பது மக்கள், ஊர்காரர்கள் வைத்த பெயராகலாம். அந்த அளவிற்கு அவர் மக்கள் நலனுக்காக செயல்பட்டுள்ளார் என்று தெரிகிறது. அதன் வெளிப்பாடே இந்த கல்வெட்டுகள். தச்சம்பட்டில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டி, தர்ம சத்திரம் கட்டி மக்கள் பணி செய்தார் ஒரு ஊர் தலைவன், 100 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளுக்கும் விலங்குகளுக்கும் தங்குமிடம் கட்டிக் கொடுத்துள்ளார் ஒரு வெள்ளக்கார கலெக்டர். இந்த கல்வெட்டுகள் இரண்டு அறச்செயலை குறிப்பிடுவதால் இது முக்கியமான கல்வெட்டு வரலாற்றில் பதிவுசெய்யப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Embed widget