Karthigai Deepam 2025: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025: தேதி என்ன? பரணி தீபம், மகா தீப தரிசனம் எப்போது? முழு விவரம்!
Karthigai Deepam 2025 Date and Time in Tamil: "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருக்கார்த்திகை தீபம் வருகின்ற டிசம்பர் 03-ஆம் தேதி விமர்சியாக நடைபெற உள்ளது"

Tiruvannamalai Karthigai Deepam 2025 Date and Time: உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில், 2025 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை உற்சவம் வருகின்ற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி (03-12-2025) நடைபெற உள்ளது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் - Tiruvannamalai Temple
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிக்கு உரிதான கோயிலாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இருந்து வருகிறது. அக்னி ஸ்தலம் என்பதால், இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை உற்சவம் மிக விமர்சியாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி (03-12-2025) அதிகாலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மகா தீப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
முக்கிய உற்சவங்கள் மற்றும் முக்கிய திருவிழா நாட்கள் விவரம் :
24-11-2025 - திங்கட்கிழமை - முதல் நாள் திருவிழா - காலை கொடியேற்றம் - மாலையில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்கள் - இரவு உற்சவம் பஞ்சமூர்த்திகள் மற்றும் வெள்ளி அதிகார நந்தி, சிம்ம வாகனம், மயில் மூஷிகம் ஆகிய வாகனங்களில் சிறப்பு உற்சவம்.
25-11-2025 - இரண்டாம் நாள் உற்சவம்- காலை உற்சவம் - விநாயகர், சந்திரசேகர் - தங்க சூரிய பிரபை உற்சவம்.
இரவு உற்சவம் -பஞ்ச மூர்த்திகள் - வெள்ளி இந்திர விமானம்
26-11-2025 - மூன்றாம் நாள் திருவிழா - காலை உற்சவம் - விநாயகர், சந்திரசேகர் - பூத வாகனம். இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் சிம்மவாகனம் - வெள்ளி அன்ன வாகனம் உற்சவம் நடைபெறுகிறது.
27-11-2025 - நான்காம் நாள் திருவிழா- காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - நாகவகம். இரவு உற்சவம் - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி காமதேனு, கற்பக விருச்சிக வாகனம் மற்றும் இதர வெள்ளி வாகனங்கள் உற்சவம் விமர்சையாக நடைபெற உள்ளது.
28-11-2025 - ஐந்தாம் நாள் திருவிழா - காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - கண்ணாடி ரிஷப வாகனம். இரவு உற்சவம் - பஞ்சமூர்த்திகள் வெள்ளிப் பெரிய ரிஷப வாகனம் உற்சவம் விமர்சையாக நடைபெற உள்ளது.
29-11-2025 - ஆறாம் நாள் திருவிழா- காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - வெள்ளி யானை வாகனம் - 63 நாயன்மார்கள் வீதியுலா. இரவு உற்சவம் - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள்.
30-11-2025 - ஏழாம் நாள் திருவிழா- காலை உற்சவம் - காலை 6 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் விருச்சக லக்னத்தில் விநாயகர் தேர் வடம் பிடித்தல். பஞ்ச மூர்த்திகள் - மகாராதங்கள் - தேரோட்டம்.
மாலையில் பஞ்ச மூர்த்திகள் - ஆஸ்தான மண்டபம் வந்து சேருதல் உற்சவம்.
01-12-2025 - எட்டாம் நாள் திருவிழா - காலை உற்சவம் - விநாயகர் ,சந்திரசேகர் - குதிரை வாகனம். மாலை உற்சவம் - 4:30 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் : இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - குதிரை வாகனம்
2-12-2025 - ஒன்பதாம் நாள் திருவிழா- காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - புருஷா முனி வாகனம் இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - கைலாச வாகனம் காமதேனு வாகனம்.
03-12-2025 - பத்தாம் நாள் திருவிழா - அதிகாலை 4 மணிக்கு பரணி தீப தரிசனம். மாலை 6:00 மணிக்கு மகா தீப தரிசனம்.
04-12-2025 - தெப்பல் திருவிழா - இரவு 9 மணிக்கு சந்திரசேகர் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
05-12-2025- தெப்பல் திருவிழா - 20 ஒன்பது மணிக்கு பராசக்தி அம்மன் டெம்பிள் உற்சவம் நடைபெறுகிறது.
06-12-2025 - தெப்பல் திருவிழா - இரவு ஒன்பது மணிக்கு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.





















