பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டுமா?- முழு விவரம் உள்ளே
பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர்பாஸ்கர பாண்டிய அறிவித்துள்ளார்.
![பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டுமா?- முழு விவரம் உள்ளே Tiruvannamalai district collector to join and benefit from the program to promote intercropping of green fodder crops - TNN பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டுமா?- முழு விவரம் உள்ளே](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/25/cc5c4e71f00e16f8b2b2eb68030189a21719299149390113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க தோப்புகள் பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தினை செயல்படுத்திட திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கருக்கு ரூபாய் 3000 வீதம் மொத்தம் ரூபாய் 15,0000-ம் நிர்ணயம் செய்யப்பட்டு மேற்படி திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தோப்புகள் பழத்தோட்டங்களில் பசுந்தீன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதற்கு திறமையும் ஆர்வமுள்ள பயனாளிகள் கீழ்காணும் அரசு விதிமுறைகளின்படி தகுதியிருப்பின் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் 28.06.2024-க்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிபந்தனைகள்:
நன்கு நிறுவப்பட்ட தோப்புகள் மற்றும் பழத்தோட்டங்கள் வைத்திருக்கும் விவசாயிகளில் பாசன வசதியுடன் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதற்கு தயாராக உள்ளவர்களை (குறைந்தபட்சம் 0.5 ஏக்கர் அதிகபட்சமாக 2.50 ஏக்கர்) பயனாளிகளாக தேர்வு செய்யப்படும், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு ஏக்கர் 3000 ஊக்கத்தொகை வழங்கப்படும். மேற்படி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பயனாளிகள் தங்களது ஆதார் அட்டைநகல், பழத்தோட்டங்களில் பசுந்தீன பயிரை ஊடுபயிராக பயிரிடும் நிலத்திற்கான சிட்டா அடங்கல் நகல், ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பசுந்தீன பயிரை பராமரிப்பதற்கான உறுதிமொழி போன்ற சான்றிதழ்களுடன் தங்களது அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)