இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு 3ம் நிலைக்கு முன்னேறி “லீடர்” தகுதியை பெற்றுள்ளது - அமைச்சர் எ.வ.வேலு
2021 மார்ச் வரை 300 நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முயற்சியால் தற்போது 7400 க்கும் மேல் உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டம் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், சட்டபேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி , பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் பேசியதாவது:
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை பொருட்டு தமிழ்நாடு அரசு வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சென்னையில் நடத்த நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும். இவ்வுலக முதலீட்டார்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன தொழில்களில் முதலீடுகளை உருவாக்கும் வகையில் முதலீடுகளை கருத்தரங்கு நமது மாவட்டத்திற்கு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூபாய்.1638 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூபாய் 1639.45 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் 4693 பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற உள்ளனர்.
மறைமுக வேலைவாய்ப்பாக பல்லாயிரம் பேருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நமது மாவட்டம் முழு இலக்கை எட்டியுள்ளது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் நிலவும் தொழில்துறைக்கு உகந்த சூழல் அமைப்பு மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் வணிகரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வோர்க்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. விண்வெளி தகவல் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவுர, ஆட்டோ மொபைல், மின்சார வாகனங்கள், ஜவுளி. தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உட்பட பல்வேறு துறைகள் அரசிடமிருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவைப் பெற்று முதலீட்டு வாய்ப்புகளை பெற்றிட உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முக்கிய தளமாக செயல்படும். குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்கும் அதன் மூலம் வாங்குபவர் விற்பனையாளர் மற்றும் பல்வேறு பங்குதாரர்களை இணைக்கும் தளமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 அமையும்.
மேலும் இம்முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரைவாக உரிய காலத்தில் பெற்றிட ஒற்றைச் சாளரத் தகவு வழியாக பெற்றுத் தர மாவட்டத் தொழில் மையம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் லீடர் தகுதியை பெற்றதற்கான இந்தியாவின் மக்கள் தொகையில் 6 சதவிகிதம் கொண்டது தமிழ்நாடு. ஆனால் இந்திய அளவில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2ம் இடமும் ஏற்றுமதியில் 3 இடமும் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடும் போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவிகித பங்களிப்பை அளிக்கின்றது. 2021 மார்ச் வரை 300 நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முயற்சியால் தற்போது 7400 க்கும் மேல் உயர்ந்துள்ளது. சென்னையைச் சார்ந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டு 1.5 முதலீடுகளை பில்லியன் டாலர் தரவரிசையில் இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு 3ம் நிலைக்கு முன்னேறி “லீடர்” தகுதியை பெற்றுள்ளது என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். விரைவில் முதல் இடத்திற்கு வர அனைவரும் பாடுபட வேண்டும்.
தமிழ்நாடு இந்திய அளவில் தொழில் துறையில் உயர்ந்துள்ளதற்கு உதரணமாக ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஜி.எஸ்.டி. வசூல் செய்ததில் உத்திரபிரதேச மாநிலத்தில் 18 ஆயிரத்து 880 கோடியில் செலுத்தியதில் 13 ஆயிரத்து 89 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பீகார் மாநிலத்தில் 4 ஆயிரத்து 731 கோடி செலுத்தியதில் 7 ஆயிரத்து 338 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 7 ஆயிரத்து 384 கோடி செலுத்தியதில் 5 ஆயிரத்து 727 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 23 ஆயிரத்து 661 கோடி செலுத்தியதில் 2 ஆயிரத்து 976 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்தியதே தொழில் வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும். மேலும் நமது மாவட்டத்தில் தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் உதாரணத்திற்கு அரிசி ஆலை வைத்திருப்பவர்கள் அரிசியை மட்டுமே விற்பனை செய்து வருகிறார்கள். அதன் உபபொருட்களை புதிய உத்திகளை பயன்படுத்தி தொழிலை விரிவாக்கம் செய்யவேண்டும், மணிலா, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை உலக தரத்தில் உற்பத்தி செய்து மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து தொழிற் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசி வியாபாரி சங்க பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.