![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Girl Child State Award: பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது; விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன..?
மாநில அளவிலான தேர்வுக் குழு மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை கூர்ந்தாய்ந்துமேற்காண் விருதினை பெற உரிய நபர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
![Girl Child State Award: பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது; விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன..? National Girl Child Day 2024 State Award For Girl Child Under 18 Years Rs 1 Lakh Cash Check Last Date to Apply- TNN Girl Child State Award: பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது; விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/25/3808a13d9ab1eed72b1c92c164de7f6e1703495961752113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை (Tiruvannamalai news)
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண்
குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூபாய் 1 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண்
குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி -24 ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூபாய் 1 லட்சம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதிகளையுடைய பெண் குழந்தைகளிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதிகள்:
1. 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை (31 டிசம்பர்-ன்
படி)
2. கீழ்கண்டவற்றில் வீர, தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.
1. பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல்.
2. பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு.
3. பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல்.
4. வேறு வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல்.
5. வேறு வகையில் எதிரான சமூக அவலங்கல்,மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு
ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும்.
விருது;
மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் மேற்காண் அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை
தேர்ந்தெடுக்கப்பட்டு
1. ஒரு பாராட்டுப் பத்திரம்.
2. ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படும்.
தேர்வுக் குழு;
மாநில அளவிலான தேர்வுக் குழு மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை கூர்ந்தாய்ந்து
மேற்காண் விருதினை பெற உரிய நபர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விருதிற்கான முன்மொழிவுகள்;
மேற்காணும் விருதினைப் பெற உரிய முன்மொழிவுகளை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி
அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர்
(ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்)காவல் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த
தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்களிடம் விபரமறிந்து பரிந்துரைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்
பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
பரிந்துரைப்பதற்கான காலம்;
இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.12.2023.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)