மேலும் அறிய

டாக்டர்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உலக வரலாற்றிலேயே ஒரு கோடி நோயாளிகளுக்கு  இல்லம் தேடி சென்று சிகிச்சை அளிப்பது இதுவே முதன் முறையாகும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 6-வது பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கலந்துக் கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை அளித்து சிறப்புரையாற்றினார். 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:

திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 6-வது பட்டமளிப்பு விழா சீரும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 98 இளங்கலை மருத்துவ மாணவ, மாணவிகள் பட்டங்களை பெறுகின்றனர். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்  பொறுப்பேற்ற பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ 7.35 கோடி செலவில் 13 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் பிரிவு செவிலியர் குடியிருப்பு மற்றும் ஆரணி அரசு மருத்துவ மனையில் சிடி ஸ்கேன் கருவி தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் ரூ 83.88 கோடி செலவில் 30 புதிய மருத்துவ கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.

டாக்டர்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் Cath Lab De-Addiction Centre ஆகியவை அமையவிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மருத்துவ துறையில் 1021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் எம்ஆர்பி சார்பில் கலந்தாய்வு மூலம் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது. மேலும் 977 செவிலியர் பணியிடங்கள் மற்றும் 400 மேற்பட்ட மருந்தாளுனர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மருத்துவ துறைக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் நோயாளிகளின் இல்லம் தேடி சென்று பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இத்திட்டத்தின் வாயிலாக ஒரு கோடி நோயாளிகள் பயனடைகின்றனர்.

டாக்டர்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விபத்தில் காயமடைந்தவரை  மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவரக்கு  ஊக்கத்தொகை  ரூ.5000 வழங்கப்படும் 

உலக வரலாற்றிலேயே ஒரு கோடி நோயாளிகளுக்கு  இல்லம் தேடி சென்று சிகிச்சை அளிப்பது இதுவே முதன் முறையாகும். மேலும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் -48 திட்டத்தின் கீழ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக 694 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2 கோடியே 54 ஆயிரத்து 256 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் ரூ 221 கோடியே 11 இலட்சம் இதுவரை செலவிடப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக  5000-காசோலை வழங்கப்படுகிறது. இது உலக அளவில் சிறப்பான திட்டம் ஆகும். மேலும் இதயம் காக்கும் நடப்போம் நலம்பெறுவோம் திட்டம் சிறுநீரக காப்போம் மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம் மற்றும் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் இலவசமாக செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

டாக்டர்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டாக்டர்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை

இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுவரை மாரடைப்பு முன் அறிகுறியுடன் வந்து பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 43 நபர்களும், துணை சுகாதார நிலையங்களில் 519 நபர்கள்  பயனடைந்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் தமிழ்நாடு மருத்துவ துறையில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும். நீங்கள் மக்களுக்கு செய்யும் சேவை நேரடியாக இறைவனுக்கு செய்யும் சேவை ஆகும். பட்டம் பெறும் மாணவ மாணவிகளை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, துணை வேந்தர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைகழகம் கே.நாராயணசாமி, இயக்குநர் மருத்துவக்ககல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் மரு. ஜே.சங்குமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget