அறிவிக்கப்படாத எமர்ஜென்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது - மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத்
கருணாபுரத்தில் விஷ கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததில் திமுக எம்எல்ஏக்களுக்கு தொடர்பு இருக்கிறது. எனவேதான் அண்ணாமலை சிபிஐ விசாரணை தேவை என்று கூறியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எரிந்த காங்கிரஸ் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்த கருப்பு நாளை நினைவு கூறும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஆர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் மற்றும் மாநில பிரச்சார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
எமர்ஜென்சி என்று கூறுவதை விட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முடக்கப்பட்ட நாள்
எமர்ஜென்சி என்று கூறுவதை விட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முடக்கப்பட்ட நாள் என்று கூறுவது தான் சரியாக இருக்கும். அரசியலமைப்பு சட்டத்தை குப்பைத் தொட்டியில் வீசிய நாள் என்றும், அம்பேத்கர் வழங்கிய உலகத்திலேயே புனிதமான நூல் இந்தியா அரசியல் அமைப்பு சட்ட நூல், கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக இந்திய அரசியல் அமைப்பு சட்ட நூலை மாற்றப் போகிறார்கள் என்றும். பட்டியலில் இன மக்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய போகிறார்கள் போன்ற தவறான பிரச்சாரங்களை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மக்களிடையே பரப்பி வந்தனர். வி.பி.சிங் ஆட்சி காலத்தில் மண்டல கமிஷன் சட்டத்தினை ஆதரித்தது பாஜக அரசு என்றும், அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஆட்சி செய்து வருவது பாஜக அரசு மட்டும் தான், அது மட்டும் இல்லாமல் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை பெற்று தந்த கட்சி பாஜக தான். ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தை குப்பைத்தொட்டியில் எரிந்து அரசியலமைப்புச் சட்டத்தை வேரோடு சாய்த்த கட்சி காங்கிரஸ் கட்சி என்றும் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியினால் மிசா காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி திமுக
இந்த காங்கிரஸ் கட்சி நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கு எதிராக இளைஞர்களுக்கு எதிராக எப்படி எல்லாம் துரோகம் செய்தது. இந்திரா காந்தி அம்மையார் ஆட்சி செய்த இரண்டு ஆண்டுகளில் கண்டது நாடு அப்பொழுது நாட்டின் மாபெரும் தலைவர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தது அத்தனை கொடுங்கோலையெல்லாம் எதிர்த்து தான் இன்றைய பாரதி ஜனதா கட்சி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று உள்ளது. காங்கிரசும், திமுகவும் பாம்பும் தேளுமாக இருப்பதாகவும் இவர்கள் விஷ கடி விலங்குகள் போல இருப்பவர்கள். தற்போது ஒன்றாக கூட்டணி அமைத்து உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியினால் மிசா காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி திமுக என்றும், ஆனால் இன்று திமுக காங்கிரசோடு கூட்டணி அமைத்துள்ளதாகவும், தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவி வருவதாகவும், மக்களை காக்க வேண்டும் என்பதற்காக தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது ஆனால் தமிழகத்தில் திமுக மக்களை காக்கும் அரசாக ஆட்சி செய்யவில்லை, மாறாக தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அரசியல் படுகொலைகள், கொள்ளை, கைதுகள், தற்போது தமிழகத்தில் கஞ்சா போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுவதாகவும் அது தவிர கள்ளச்சாராயம் இறப்புக்களால் உலக நாடுகள் மத்தியில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளனர்.
திமுக. அதிமுக போராட்டத்தை ஆதரித்து 2 கட்சிகள் ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறுகளை மறைக்கப் பார்க்கின்றன
இதனை தட்டிக் கேட்க முடியாத எமர்ஜென்சி நிலை தான் தற்போது தமிழகத்தில் உள்ளது. பாஜக இவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினால் அவர்கள் கைது செய்யப்படுவதாகவும், ஆனால் அதிமுக போராட்டத்தை சிவப்பு கம்பளம் போட்டு திமுக அரசு வரவேற்கிறது. பாஜகவினரை ஆர்ப்பாட்டம் செய்ய விடாமல் காவல்துறையினர் மூலம் கைது செய்து ஒடுக்குவதாகவும், பாஜக ஆன்மீக அடிப்படையில் நடத்த வேண்டிய போராட்டத்தை தமிழக அரசு முடக்கியதாகவும், ஆனால் அதிமுக போராட்டத்தை ஆதரித்தது என்பது இரண்டு கட்சிகளும் தங்களது ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறுகளை மறைக்கப் பார்க்கின்றன அதேபோன்று திராவிட மாடல் ஆட்சியின் நாடகம் தான் தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும், கருணாபுரத்தில் விஷ கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததில் திமுக எம்எல்ஏக்களுக்கு தொடர்பு இருக்கிறது எனவேதான் பாஜக தலைவர் அண்ணாமலை சிபிஐ விசாரணை தேவை என்று கூறியுள்ளார். எங்கே தங்களின் உண்மை முகம் வெளிவரும் என்று பாஜகவினரை கைது செய்வதும் அடக்குவதுமாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆகவே தான் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இன்று தமிழகத்தில் நடைபெற்று வருவதாக மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் குற்றம் சாட்டினார்.