மேலும் அறிய
டைல்ஸ் இறக்கும் போது பாரம் சரிந்து தொழிலாளி பலி - குமரியில் சோகம்
கூலி தொழிலாளி உயிரிழந்தது இப்பகுதி வாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்னியாகுமரியில் தொழிலாளர் இறப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே லாரியில் இருந்து டைல்ஸ் இறக்கும் போது பாரம் சரிந்து தொழிலாளி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 43 ). இவரது மனைவி வினிதா. இவர்களுக்கு 4 மற்றும் 7 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இவர் லாரியில் இருந்து பாரம் இறக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று பாகோடு ஆலுவிளை பகுதியில் ஒரு வீட்டிற்காக லாரியில் இருந்து டைல்ஸ்களை இறக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென சில டைல்ஸ்கள் லாரியில் இருந்து இவரது மீது பாரத்துடன் சரிந்தது இதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலி தொழிலாளி உயிரிழந்தது இப்பகுதி வாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















