Watch Video| விஜிலென்ஸுக்கு சொல்லவா? - ஒப்பந்ததாரர்களை கண்டிக்கும் அமைச்சரின் வீடியோ வைரல்
’’திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்ட தரமற்ற தார் சாலையை சில இளைஞர்கள் கையால் பெயர்த்து எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது’’
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 6 ஆண்டுகளாக பழுதடைந்து உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் முழு வீச்சி நடைபெற்று வருகிறது இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன் திருத்துவபுரம் பகுதியில் திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்ட சாலை யை சில இளைஞர்கள் கையால் பெயர்த்து எடுக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மனைவியை கொலை செய்துவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட கணவன் தற்கொலை
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஆடுகளத்திற்கு செல்ல தயாராகும் சண்டை சேவல்கள் - மாநில அளவில் நடைபெற இருக்கும் சேவல் சண்டை போட்டி
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியில் சாலை பணிகள் குறித்து தமிழக தொழில் நுட்ப வியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார் அப்போது குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்ற இடத்தில் சாலை தரமற்ற முறையில் சீரமைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் மனோ தங்கராஜ் சாலை அமைத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- 11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமான வழக்கில் திடீர் திருப்பம் - மேலும் 5 பேர் போக்சோவில் கைது
அப்போது , அவர்கள் மாற்றி மாற்றி அடுத்தவரை குற்றம் சாட்டவே கடுப்பான அமைச்சர் உங்களை விஜிலென்ஸில் புகார் அளித்தால் தான் சரிவரும் என கடித்தார். மேலும் சாலை தரமற்ற முறையில் இருப்பதற்கு பல காரணங்களை அதிகாரிகள் கூறியும் அதனை ஏற்க மறுத்த அமைச்சர் தொடர்ந்து அவர்களிடம் மீண்டும் இது போல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார் மேலும் சாலைகளை உடனடியாக முறையாக செப்பனிட்ட வேண்டும் என கூறினார்.
தற்போது இந்த வீடியோயும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது இதற்கிடையே திருத்துவபுரம் பகுதி இளைஞர்கள் எடுத்த விடியோ விற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக 2 வீடியோக்களையும் சேர்த்து வைரல் செய்ய துவங்கி உள்ளனர் நெட்டிசன்கள். எது எப்படியோ மாவட்டத்தில் உள்ள சாலைகளை தரமான முறையில் அமைத்து தந்தால் மட்டும் போதும் என குமரி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மேல்மட்ட தவறுகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது - நியாயவிலைக்கடை ஊழியர்கள் சங்கம்