உதயநிதியின் பேச்சு இந்துமதத்தின் மீதான தாக்குதல்; திமுகவிற்கு நல்லது இதுதான் - எச்.ராஜா
”முருகன் பெயரால் கொள்ளையா? ஆன்மீக மாநாடு இல்லை என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லை? ஆன்மீக மாநாடு இல்லை என்றால் அறநிலையத்துறையின் பணம் செலவு செய்தது தவறு, அந்த பணத்தை அரசு திருப்பி கொடுங்கள்”
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை வந்த பாஜக மூத்த தலைவர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்கவுண்டர் திட்டமிட்ட கொலை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய சிவராமான் காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் போது எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்துள்ளார் அந்த எலி மருந்தை வாங்கிக் கொடுத்தது யார்? தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் முக்கியமான குற்றவழக்குகளில் திட்டமிட்ட ரீதியில் அதனுடைய ஆதாரங்களை அழிக்கும் விதமாக செயல்படுகிறது. காவல்துறையின் போக்கு எந்த ஒரு மோசமான குற்றங்களையும் தீர்வு காணாமல் வழக்கை முடித்து வைப்பதாகவே இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது கவலையளிக்கும் ஒரு விசயம். இந்து மத விசயங்களில் அநாவசியமாக தலையிடுவது மட்டுமல்ல. கோவிலுக்கு அநாவசியமாக செலவும் செய்வது போல் அறநிலையத்துறை செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பழனியில் நல்ல இருக்கிற சுவரை இடித்துக் கட்டுகின்றனர். இப்போது கட்டுவது பலவீனமானதாக இருக்கிறது. 1600 கோடி ரூபாய்க்கு செலவு செய்வதாக சொல்கிறார்கள். நாத்தீக அரசுக்கு என்ன மாநாடு நடத்துகிறது. அதில் தவறான கருத்துக்களை முதல்வர் சொல்கிறார். கருவறையில் சமத்துவம் கொண்டு வருகிறேன் என்று. தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அர்ச்சகர்களாக இருக்கின்றனர். அநாவசியமாக இந்து மதத்தினரிடையே வேதங்களை, கலகங்களை உருவாக்கி அதன் மூலம் மதமாற்றம் செய்வதற்கு வழிபோட்டு கொடுப்பது போல் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்து சமுதாயத்தில் எந்த வித பேதங்களும் இன்றி எல்லா கோவில்களிலும் எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் குறிப்பாக பட்டியல் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் மேற்கொண்டு அர்ச்சகர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்த அரசாங்கம் வீணாக இந்து மக்களிடையே கலகம் ஏற்படுத்துவது போன்று கருத்துக்களை தெரிவிப்பது இந்துக்களை மத மாற்றம் செய்யும் தீய நோக்கத்தோடு நடக்கிறது. இவர்கள் மாநாடு நடத்துவது கோவில் பணத்தை சாப்பிடுவதற்காக தான். இருப்பினும் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசாங்கம் கோவில்களை இடிக்குது. கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை கட்டிவிட்டு இப்பொழுது கருணாநிதிக்காக 30 வருடமாக இருந்த இந்து கோவிலை பலி கொடுக்கின்றனர். அமைச்சர் சக்கரபாணி, பாராளுமன்ற உறுப்பினர், அறநிலையத்துறை அதிகாரிகள் விக்ரகங்கள் இருக்கும் இடத்தில் காலில் ஷூவுடன் செல்கின்றனர். என்னிடம் போட்டோ உள்ளது. இந்து மதத்தை அசிங்கப்படுத்த அருவருக்கத்தக்க விதத்தில் அமைச்சரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் நடந்துள்ளனர். முதலில் மன்னிப்பு கேளுங்கள்.
திமுகவும், அதிமுகவும் இரண்டு ஒன்று தான். ஏ டி எம் கே என்பது ஆன்ட்டி டிஎம்கே. அதிமுக திமுக ரெண்டுமே திராவிடன் ஸ்டாக். பொய் சொல்வதே இருவருக்கும் வேலை. மக்களை திசை திருப்பவே திட்டமிட்டு அதிமுக திமுக பொய் சொல்லி வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டங்களாக கொடுத்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் அனைத்து சாலை திட்டங்களும் மத்திய அரசு நிதியிலிருந்து நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு மட்டும் 6374 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போது கூட பல திட்டங்களை தொடங்குவதற்கு பிரதமர் நேரில் தமிழகம் வந்துள்ளார். மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலினுடன் சேர்ந்து எடப்பாடியும் புழுக ஆரம்பித்துள்ளார். 2014 இல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் உலக அரங்கில் 11 வது இடத்தில் இருந்த இந்தியா 5 வது இடத்திற்கு வந்துள்ளது. திராவிடியன் ஸ்டாக் புழுகுவதை புழுகட்டும், மக்கள் பார்த்துக்கொள்வர் என்றார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஆன்மீகம் மட்டுமல்லாத மாநாடு என முருகன் மாநாட்டில் பேசியதற்கு பதில் அளித்த எச். ராஜா ஆன்மிகம் இல்லாத மாநாட்டிற்கு அறநிலையத்துறை ஏன் இவ்வளவு செலவு செய்தது. முருகன் பெயரால் கொள்ளையா? ஆன்மீக மாநாடு இல்லை என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லை? ஆன்மீக மாநாடு இல்லை என்றால் அறநிலையத்துறையின் பணம் செலவு செய்தது தவறு அந்த பணத்தை அரசு திருப்பி கொடுங்க? ஆன்மீக மாநாடு மட்டுமல்ல என சொல்லிக் கொண்டு மாநாட்டிற்கு போஸ்டர் ஒட்டி காணொளி காட்சியில் பேசுவதற்கு ஆண்டவன் பணமா? மக்கள் கோவிலுக்கு கொடுத்த உண்டியல் பணத்தை திருடுவீர்களா? ஆண்டவன் பணத்தை செலவு செய்தால் மரியாதை ஒத்துக்கொள்ளுங்கள் ஆண்டவனுக்காக என்று. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் உதயநிதியின் இந்து விரோத பேச்சுக்கு வழக்கு நடந்து வருகிறது. நான் கிறிஸ்தவர், காதலித்து மணந்த என் மனைவி கிறிஸ்தவர் என உதயநிதி அவரே சொன்னார். ஒரு கிறிஸ்தவர் இந்து மதத்தின் மீது நடத்துகின்ற தாக்குதல் தான் இது. உதயநிதியின் பேச்சே இந்து விரோத பேச்சு. மதம் மாறிய கிறிஸ்தவர் இந்து மதத்தை தாக்குகிறார். உதயநிதி போன்றோர் இந்து மதத்தை பற்றி பேசாமல் இருப்பது திமுகவிற்கு நல்லது. இல்லையெனில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.