மேலும் அறிய

மாதவிடாய் தீட்டல்ல..! நெல்லையில் ஐந்தாயிரம் மாணவிகள் உலக சாதனை நிகழ்வு நடத்தி அசத்தல்...!

இன்னும் சில கிராமங்களில் மாதவிடாயால் பல பெண்கள் பல்வேறு அவமானங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலையே உலக சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது.

நெல்லை பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் அக்னி சிறகுகள் என்ற அமைப்பு இணைந்து பெண்களின் மாதவிடாய் நிகழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளை கொண்டு மாதவிடாய் சின்னம் வடிவமைக்கும் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. மாதவிடாயின்போது பெண்கள் உடலில் இருந்து கழிவுகள் இரத்தப்போக்காக வெளியேறும் மாதத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறும். மாதவிடாய் நிகழ்வின்போது பெண்கள் வயிற்று வலி, உடல் சோர்வு, பசியின்மை போன்ற பல்வேறு இடர்பாடுகளை சந்திப்பார்கள். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதவிடாய் நேரத்தில் பெண்களை வீட்டை விட்டு வெளியே வராமல் நான்கு சுவற்றுக்குள் அடைத்து வைத்திருப்பார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் மாதவிடாய் என்பது பெரும் தீட்டாகவே பார்க்கப்பட்டது. அந்த சமயங்களில் பெண்கள் வெளியே வரக்கூடாது, யாரையும் பார்க்க கூடாது என பெற்றோர்களே கடும் நிபந்தனைகளை விதிப்பார்கள்.

எனவே மாதவிடாய் பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் மாதவிடாய் என்ற தடையை உடைத்து பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். குறிப்பாக விண்ணிற்கு செயற்கைக்கோள் அனுப்பும் அளவுக்கு பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். இருப்பினும் இன்னும் சில கிராமங்களில் மாதவிடாய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல பெண்கள் பல்வேறு அவமானங்களை சந்தித்து வருகிறனர். எனவே அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலையே இன்று  ராணி அண்ணா கல்லூரியில் இந்த உலக சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது. இதையொட்டி சுமார் 5 ஆயிரம் மாணவிகள் கல்லூரியின் மைதானத்தில் ஒன்று திரண்டு மாதவிடாயின் போது ஏற்படும் ரத்தப் போக்கை சித்தரிக்கும் வகையில் குழுவாக அமர்ந்தனர்.

மாநகராட்சி மேயர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய கல்லூரி பேராசிரியர்கள் மாதவிடாய் சமயத்தில் வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும், அல்லது வேலை செய்யும் பகுதியில் ஓய்வெடுக்க வசதி செய்து கொடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் நாப்கின் இயந்திரம் வைப்பதை கட்டாயமாக வேண்டும். பொதுவெளியில் கடைகளில் மாதவிடாய் ஒன்று தீட்டு இல்லை என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். இது குறித்து மாணவிகள் கூறும்போது, அந்த காலத்தில் மாதவிடாய் என்றாலே தீட்டு என்பார்கள் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பார்கள். ஆனால் தற்போது மாதவிடாய் தீட்டல்ல என்பதை நிரூபித்து பெண்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். பெண்கள் மத்தியில் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த உலக சாதனை முயற்சியை நாங்கள் செய்துள்ளோம் என பெருமையோடு தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget