மேலும் அறிய

கோயில் ஆக்கிரமிப்பை எதிர்த்த லோடு ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - காவல் உதவி ஆய்வாளர் கைது

”இவ்வழக்கில் தொடர்புடைய நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கைது மற்றும் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவு”

நெல்லை மாவட்டம் மானூர் சுப்பையாபுரம் பகுதியில் பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது,  2.75 சென்ட் நிலப்பரப்பில் உள்ள இக்கோவில் 78 நபர்கள் அடங்கிய கூட்டு பட்டாவில் உள்ளது, இங்கு பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடு நடத்தி வரும் சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இக்கோவிலில் பூஜைகள் எதுவும் நடைபெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இக்கோவிலில் அருகே நெல்லை மாநகர காவல்துறையில் நில அபகரிப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் அழகு பாண்டியன் தனது மனைவியின் ஊரான சுப்பையாபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த  சூழலில் இவர் கோவில் அருகே உள்ள இடத்தில் கார்செட் மற்றும் சிறிய தோட்டம் அமைத்து பராமரித்து வந்ததாகவும், இதனை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் 27 ஆம் தேதி கோவில் அருகே ஆக்கிரப்பில் இருந்த பொருட்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கி உள்ளனர், இதனை தொடர்ந்து அழகுபாண்டியன் மானூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார், அதன்படி சுப்பையாபுரத்தை சேர்ந்த சசிகுமார் உள்ளிட்ட 9 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நிபந்தனை ஜாமினில் அவர்கள் கையெழுத்திட்டும் வருகின்றனர்.

கோயில் ஆக்கிரமிப்பை எதிர்த்த லோடு ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - காவல் உதவி ஆய்வாளர் கைது

இந்த சூழலில் தான் கடந்த 24 ஆம் தேதி இரவு சசிகுமார் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு விற்பனை செய்வதற்காக நெல்லை டவுண் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு லோடு ஆட்டோவில் வந்துள்ளார், ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட்டில் சசிகுமார் காய்கறிகளை இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சசிகுமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இரத்த வெள்ளத்தில் சாய்ந்த சசிகுமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்து கொண்டிருந்தார். சுற்றி இருந்த மற்ற தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார், இச்சம்பவம் தொடர்பாக தச்ச நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவில் ஆக்கிரமிப்பு தொடர்பாக அதற்கு எதிராக சசிகுமார் செயல்பட்டதால் இந்த கொலை நடந்ததாக தெரிய வந்தது.

கோயில் ஆக்கிரமிப்பை எதிர்த்த லோடு ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - காவல் உதவி ஆய்வாளர் கைது

குறிப்பாக கடந்த வாரம் சிறப்பு உதவி ஆய்வாளர் அழகுபாண்டியனின் மகன் பாலமுருகனுக்கும் சசிகுமாருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனை ஊர் பெரியவர்கள் தடுத்து நிறுத்தி பிரச்சினையை தீர்த்து வைத்து உள்ளனர். கோவில் நில ஆக்கிரமிப்பை எதிர்த்ததன் காரணமாகவே திட்டமிட்டு இந்த கொலை சம்பவம் நடந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.  மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதோடு இவ்வழக்கில் தொடர்புடைய சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 9  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

கோயில் ஆக்கிரமிப்பை எதிர்த்த லோடு ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - காவல் உதவி ஆய்வாளர் கைது

அதேபோல பிரச்சினைக்குரிய இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளும் உடனடியாக அகற்றப்பட்டது,  தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் அழகுபாண்டியன் அவரது மனைவி ராஜம்மாள், மகன் பாலமுருகன் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் மறியல் கைவிடப்பட்டது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அழகு பாண்டியனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.

கோயில் ஆக்கிரமிப்பை எதிர்த்த லோடு ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - காவல் உதவி ஆய்வாளர் கைது

தொடர்ந்து கொலையுண்ட சசிகுமார் உடலை வாங்க மறுத்து போராட்டம் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுப்பையாபுரம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்  நேரில் சென்று  சசிகுமார் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி கிராம மக்கள் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் கொலையான சசிகுமார் குழந்தைகள் இருவரின் பள்ளி, கல்லூரி படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும்,  இலவச வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாகவும்,  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தர  உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்து போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்;  தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்; தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
Embed widget