மேலும் அறிய

வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கதேவி ஆலய திருவிழா - தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரச் சக்கதேவி என்ற ஜக்கம்மா கோயில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள்ளே உள்ளது. எந்த செயலை முன்னெடுத்தாலும் ஜக்கம்மாளின் அருளோடு தான் முன்னெடுப்பார் கட்டபொம்மன்.

தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் இன்று மாலை 6 மணி முதல் 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144-தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரச் சக்கதேவி என்ற ஜக்கம்மா கோயில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள்ளே உள்ளது.எந்த செயலை முன்னெடுத்தாலும் ஜக்கம்மாளின் அருளோடு தான் முன்னெடுப்பார் கட்டபொம்மன். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஜக்கம்மா கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த வருடம் பாஞ்சாலங்குறிச்சியில் 12-05-23  மற்றும் 13-05-23 ஆகிய தேதிகளில் வீரச்சக்க தேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கதேவி ஆலய திருவிழா - தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

இதுதொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 12.05.2023 மற்றும் 13.05.2023 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 11.05.2023 மாலை 6.00 மணி முதல் 14.05.2023 காலை 6.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கதேவி ஆலய திருவிழா - தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கதேவி ஆலய திருவிழா - தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
Supreme Court Condemn: கோயிலுக்குள் செல்ல மறுத்த ராணுவ அதிகாரி; கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்; நடந்தது என்ன.?
கோயிலுக்குள் செல்ல மறுத்த ராணுவ அதிகாரி; கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்; நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?
Tirunelveli thief Letter |‘’வீட்டுல ஒரு ரூபாய் இல்லைஎதுக்கு யா இத்தனை CCTV.. ’’திருடன் எழுதிய LETTER
DMK MP helps Student |‘’சார் HELP பண்ணுங்க’’ உதவி கேட்ட சிறுவன் வியந்து பார்த்த MP
கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
Supreme Court Condemn: கோயிலுக்குள் செல்ல மறுத்த ராணுவ அதிகாரி; கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்; நடந்தது என்ன.?
கோயிலுக்குள் செல்ல மறுத்த ராணுவ அதிகாரி; கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்; நடந்தது என்ன.?
WTC Points Table: இந்திய அணியை துரத்தும் சாபம்.. தோல்வியால் WTC பட்டியலில் சரிந்த செல்வாக்கு!
WTC Points Table: இந்திய அணியை துரத்தும் சாபம்.. தோல்வியால் WTC பட்டியலில் சரிந்த செல்வாக்கு!
Sengottaiyan: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.! இது தான் காரணமா.?
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.! இது தான் காரணமா.?
China Japan Trump: தைவான் விவகாரம்; சீனா, ஜப்பான் இடையே எகிறும் பதற்றம்; ட்ரம்ப்புக்கு மாறி மாறி பறக்கும் போன் கால்கள்
தைவான் விவகாரம்; சீனா, ஜப்பான் இடையே எகிறும் பதற்றம்; ட்ரம்ப்புக்கு மாறி மாறி பறக்கும் போன் கால்கள்
Gold Rate Nov.26th: இந்த தங்கத்த என்னதான் பண்றது.? 2 நாட்களில் ரூ.2,240 விலை உயர்வு; இன்றைய விலை என்ன.?
இந்த தங்கத்த என்னதான் பண்றது.? 2 நாட்களில் ரூ.2,240 விலை உயர்வு; இன்றைய விலை என்ன.?
Embed widget