மேலும் அறிய
Advertisement
முந்திரி லாரியை கடத்திய முன்னாள் மந்திரியின் வாரிசு - அதிமுகவினர் அதிர்ச்சி
’’கைது செய்யப்பட்டுள்ள ஜெபசிங், தூத்துக்குடி முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனின் மகன் ஆவார்’’
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள தனியார் முந்திரி ஆலையில் இருந்து 1.10 கோடி மதிப்புள்ள 12 டன் எடை கொண்ட முந்திரியுடன், சரக்கு பெட்டகத்தை ஏற்றி கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு லாரி சென்றது. இந்த லாரியை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி டிரைவரை மிரட்டி லாரியை கடத்தினர்.இதனை தொடர்ந்து லாரியில் இருந்த ஜி.பி.எஸ் கருவியை அகற்றிய அவர்கள், லாரியை அவர்களுடன் கொள்ளையில் ஈடுப்பட்டவரை வைத்து கடத்தி சென்று உள்ளனர்.
இது தொடர்பாக டிரைவர் ஹரி, முந்திரி ஆலை மேலாளர் ஹரிகரன் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனைத்துச் சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்தனர். மேலும், பின்னால் காரில் வந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தூத்துக்குடி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சித செல்லப்பாண்டியன் மகன் ஜெயசிங் (45), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கணபதி மகன் மாரிமுத்து (30), முறப்பநாடு கணபதி கோவில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் செந்தில் முருகன் (33), முள்ளக்காடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மனோகரன் (35), பிரையண்ட் நகர் 12வது தெருவைச் சேர்ந்த சக்தி மகன் விஷ்னு (25), முறப்பநாட்டைச் சேர்ந்த முனியசாமி மகன் பாண்டி (20), நெல்லை சமாதான புரத்தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (26) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டுள்ள ஜெபசிங், தூத்துக்குடி முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனின் மகன் ஆவார். இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் விசாரணைக்காக தூத்துக்குடி அழைத்து சென்றனர். மேலும் கடத்தப்பட்ட லாரி, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றையும் போலீசார் தூத்துக்குடிக்கு கொண்டு சென்றனர். தூத்துக்குடியில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள முந்திரி, லாரியுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion