தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி நிறைவ - பருவநிலை சாதகம் இல்லாததால் உற்பத்தி குறைவு
இந்த ஆண்டு சராசரியாக 60% அளவிற்கு சுமார் 15 லட்சம் தன் அளவுக்கு தான் உப்பு உற்பத்தியாகி உள்ளது. ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் துவங்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதியில் சுமார் 25000 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இவைகளில் சுமார் 30,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் செய்யப்படுகிறது. ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் துவங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆறு மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதும் உற்பத்தி முடிவடையும். இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கு பருவநிலை கை கொடுக்கவில்லை அவ்வப்போது பெய்த மழை மற்றும் சரியாக வீசாத மேல் திசை காற்று போன்றவற்றால் உப்பு உற்பத்தி சரியாக நடைபெறவில்லை.
வடகிழக்கு பருவமழை தொடங்க காலதாமதம் ஏற்பட்டு கூடுதலாக இரண்டு வாரங்கள் வரை உப்பு உற்பத்திக்கு வாய்ப்பு கிடைத்த போதிலும் கடந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக நிலவிய பருவநிலை மற்றும் உப்பு உற்பத்திக்கு சாதகமாக அமையவில்லை கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தற்போது உப்பளங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையின் காரணமாக முழுமையாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்ததுள்ளது. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்புக்கு அம்பாரத்திற்கு பிளாஸ்டிக் சீட்டுகளை போட்டும் தென்னங்கீற்றுகளாலும் பாதுகாப்பாக மூடி வைக்கும் பணிகளில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் தனபாலிடம் கேட்டபோது, “தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவநிலை சரியாக அமையாததால் உப்பு உற்பத்தியும் சரியாக நடைபெறவில்லை. ஒரு சில உப்பளங்களில் 65% வரை உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது. அதே நேரங்களில் பல உப்பளங்களில் 55 சதவீதம் அளவுக்கு உப்பு உற்பத்தி நடந்துள்ளது. இந்த ஆண்டு சராசரியாக 60% அளவிற்கு சுமார் 15 லட்சம் தன் அளவுக்கு தான் உப்பு உற்பத்தியாகி உள்ளது.
இதில் சுமார் 9 லட்சம் டன் உப்பு விற்பனை செய்யப்பட்டு விட்டது. இன்னும் சுமார் 6 லட்சம் டன் அளவுக்கு உப்பளங்களில் இருப்பு உள்ளது. அடுத்த சீசன் தொடங்கி உப்பு உற்பத்தி வரும் வரை கிட்டத்தட்ட அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்த போதுமானதாக இருக்கும் தற்போது உப்பு ஒரு டன் ரூம் 2500 முதல் 3000 வரை விலை போகிறது. இது ஓரளவு நல்ல விலை தான் மழை காலம் தொடங்கியதும் விலை உயர்வு என்பது வரும் நாட்களில் உள்ள உப்பின் தேவையை பொருத்தே இருக்கும்” என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்