மேலும் அறிய

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உபரி வருவாய் வரும் என எதிர்பார்ப்பு - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 2024- 2025 -ம் நிதியாண்டுக்கான உத்தேச வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அப்போது, தூத்துக்குடி மாநகராட்சியில் 2024- 2025 -ம் நிதியாண்டில் வருவாய் நிதியில் சொத்துவரி, இதர வரி மற்றும் வரியில்லா இனங்கள், முத்திரை கட்டணம் மற்றும் கேளிக்கை வரி, அரசு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதி உள்ளிட்ட வருமானம் மூலம் ரூ.153 கோடியே 29 லட்சத்து 70 ஆயிரம் வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரூ.152 கோடியே 75 லட்சத்து 49 ஆயிரம் செலவாகும் என்றும், இதில் ரூ.54 லட்சத்து 21 ஆயிரம் உபரியாக வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று குடிநீர் வரி மற்றும் பயன்பாட்டு கட்டணம் மூலம் பெறப்படும் வருமானத்தில் ரூ.7 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரம் உபரியாக வரும் என்றும், ஆரம்ப கல்வி வரி மூலம் பெறப்படும் நிதியில் உபரியாக ரூ.3 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரம் உபரி வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநகராட்சிக்கு மொத்தம் ரூ.10 கோடியே 87 லட்சத்து 63 ஆயிரம் உபரி வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும் போது, 34-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பூங்கா மற்றும் நூலகங்களை சீரமைத்து வர்ணம் பூச வேண்டும். வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், சொத்துவரி, குடிநீர் வரியில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உபரி வருவாய் வரும் என எதிர்பார்ப்பு - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

இதற்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, "தூத்துக்குடி மாநகராட்சியில் வரலாறு காணாத மழை பெய்தது. மாநகரை சுற்றி 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த வெள்ளத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர், எம்.பி, அமைச்சர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மீண்டு வந்து உள்ளோம். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநகராட்சியில் 1540 சாலைகள் போடும் பணி நடந்தது. மழை காரணமாக இதில் தொய்வு ஏற்பட்டது 375 சாலைகள் அமைக்கப்படாமல் இருந்தது. வெள்ளத்துக்கு பிறகு மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு 471 சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்து 500 மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 1900 விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி குப்பைகளை பிரித்துக் கொடுப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் 126-வது மாநாகராட்சியாகவும், தமிழகத்தில் 2-வது சிறந்த மாநகராட்சியாகவும் விளங்கி வருகிறது. வழக்கமாக தினமும் 180 டன் குப்பை சேகரிக்கப்படும். மழைக்காலத்தில் சுமார் 1000 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டன. காலி இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை அகற்று மாநகராட்சி நடவடிக்கை எடுக்காது. திரு.வி.க.நகர் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காலி இடத்தில் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் நிற்கிறது. இதனை அகற்றுவது சாத்தியமில்லாதது. வரிவிலக்கு அளிப்பதற்கு அரசுதான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget