மேலும் அறிய

நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!

நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்றுகிறார்.

ஆளுநரின் குடியரசு தின தேனீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை கண்டித்து தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்றுகிறார். மேலும் அணிவகுப்பும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இந்த விழாவில்  முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையடுத்து  அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேனீர் விருந்து கொடுப்பது வழக்கம்.

இதற்கான அழைப்பிதல் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும் அனுப்பப்பட்டது. ஆனால் வழக்கமாக ஆளுநர் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி திமுகவின் கூட்டணி கட்சிகள் தேனீர் விருந்தை புறக்கணிக்கும்.

ஆனால் இந்த முறை திமுக கூட்டணிக் கட்சிகள் தேனீர் விருந்தை புறக்கணிப்பதோடு, திமுக அரசே புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கமாட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி அரிட்டாப்பட்டி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.

தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும் தனித்தீர்மானமும் கொண்டுவந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதையடுத்து பாஜகவை சேர்ந்த அண்ணாமலை மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வர் பதவியிலேயே இருக்க மாட்டேன் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் சூளுரைத்தார். இதைத்தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து டங்ஸ்டன் போராட்டக்காரர்கள் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர், முதல்வரை அரிட்டாப்பட்டி வர வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று நாளை முதலமைச்சர் ஸ்டாலின் அரிட்டாப்பட்டி செல்கிறார். எனவே நாளை விருந்தில் பங்கேற்க முடியாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், காங்கிரஸ், இடது சாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளும் தேனீர் விருந்தை புறக்கணித்துள்ளன.  

தலைப்பு செய்திகள்

CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை அலர்ட்: உங்க ஊரு இந்த லிஸ்ட்ல இருக்கா? முழு விவரம்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை அலர்ட்: உங்க ஊரு இந்த லிஸ்ட்ல இருக்கா? முழு விவரம்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget