மேலும் அறிய
Advertisement
அதிமுக ஏமாற்றியது...! திமுக ஏற்றிவிட்டிருக்கிறது...! - முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் உப்பளத் தொழிலாளிகள்...!
’’அதிமுக தேர்தல் அறிக்கையில் 5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது ஆனால் கடந்த காலங்களில் உப்பள தொழிலாளிகளுக்கு மழைக்கால நிவாரணம் வழங்காமல் ஏமாற்றியது’’
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகனேரி வரையிலான கடற்கரை சார்ந்த பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உப்பு தொழில் நடைபெற்று வருகிறது இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுப்பட்டுள்ளனர். உப்பு தொழில் போதுமான தொழிலாளிகள் இல்லாதது துறைமுகம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி போன்றவற்றால் உப்பளத் தொழிலுக்கான மவுசு சமீப காலமாக குறைந்து வருகிறது.
உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர். இதில் குறிப்பாக பெண்கள் சுமார் 40 கிலோ எடையுள்ள உப்பு கூடையுடன் தலையில் சுமந்து உப்பு அம்பாரம் செய்வது மிகவும் கடும் பணியாக உள்ளது. குடும்ப சூழல், பொருளாதார நிலை உள்ளிட்டவைகளால் இப்பணிகளை செய்து வந்தாலும் கூட மழை காலம் வந்தால் அதிலும் மண் விழுந்து மூன்று மாத காலம் வேலை இழப்பு என கண்ணீரில் கரைகின்றனர் தொழிலாளிகள். உப்பள தொழில் பெரும்பாலும் வெயில் காலங்களில் மட்டுமே நடைபெறும் நிலையுள்ளது மழை காலங்களில் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கிவிடுவதால் உப்பு உற்பத்தி சுமார் 3 முதல் 4 மாத காலம் நடைபெறுவதில்லை.
இந்த மழை காலங்களில் உப்பளத்தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது அதிமுக தேர்தல் அறிக்கையில் உப்பள தொழிலாளிகளுக்கு மழை கால நிவாரணமாக 5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்த வரை உப்பள தொழிலாளிகளுக்கு மழைக்கால நிவாரணம் வழங்காமல் ஏமாற்றியதாக உப்பளத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றால் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிவிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நடந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக்கூட்டத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் இந்த அறிவிப்பு உப்பள தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியில் உப்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்தும் சக தொழிலாளர்களுக்கு, இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதுகுறித்து அமைப்புசாரா உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையான மழைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி இந்த ஆண்டிலேயே நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. உப்பளத் தொழிலாளர்களின் நிவாரண நிதிக்கு பரிந்துரை செய்த தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு உப்பள தொழிலாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.
அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி கூறும்போது,
உப்பளங்களில் குடிதண்ணீர், கழிப்பிடம், ஓய்வறை, குழந்தைகள் காப்பகம், பாதுகாப்பு உபகரணங்கள், நடமாடும் மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை வேலையிடத்தில் ஏற்படுத்தி தரவேண்டும், உப்பள தொழிலாளர்களின் முழுமையான கணக்கெடுப்பை அரசு எடுக்க வேண்டும், உப்பளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உப்பள நிலங்களை நேரடியாக குத்தகைக்குவிட்டு அவர்களது நிலம் வளம் சார் உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை அரசுக்கு விடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தஞ்சாவூர்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion