மேலும் அறிய

குற்றாலத்தில் லிட்டர் கணக்கில் கலப்பட பதநீர் அழிப்பு - உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட பிரியாணி கடை ஒன்றில் 33 கிலோ பதப்படுத்தப்பட்ட மீன், சிக்கன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் தென் தமிழகத்தில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதோடு கார்த்திகை மாதம் விரதம் இருந்து மாலை அணிவித்து கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகையும் அதிக அளவில் இருக்கும், இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பல உணவகங்கள்  அதிகமான அளவில் உணவுகளை பதப்படுத்தி விற்பனை செய்து வருவதாகவும், சாலையோரம இருக்கும் டீ கடைகள், நுங்கு விற்பனை கடைகள் போன்றவற்றிலும் சுகாதரமற்ற நிலையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்பட பொருட்களை பயன்படுத்துவதாகவும் உணவுப்பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளது. அதோடு  நேற்று வார விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். 

இந்த நிலையில் குற்றாலத்தில் சாலையோரம் உள்ளம் டீ கடைகள் மற்றும் நுங்கு விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பழைய குற்றாலம் பகுதியில் சாலையோரம் பதநீர் விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரியிடம் சோதனை மேற்கொண்டதில் அதிகளவு சுண்ணாம்பு மற்றும் சாக்ரீன் போன்ற பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 18 லிட்டர் பதநீர் கைப்பற்றப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. இதே போன்று குத்துக்கல் வலசை பகுதியில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வடை, முறுக்கு, கேக் உள்ளிட்ட 14 கிலோ காலாவதியான தின்பண்டங்கள் பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டது. மேலும் குற்றாலத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரமான முறையில் உணவு பண்டங்களை வழங்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றார்.

குற்றாலத்தில் லிட்டர் கணக்கில் கலப்பட பதநீர் அழிப்பு - உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட பிரியாணி கடை ஒன்றில் 33 கிலோ பதப்படுத்தப்பட்ட மீன், சிக்கன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு உணவகங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பிரபல பரோட்டா கடையிலும் இதே போன்று ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதான சுற்றுலா தலமான குற்றாலத்தில்  தொடர்ந்து இது போன்று பல்வேறு உணவங்களில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதும் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழிப்பதும் பொதுமக்களிடையே அச்சத்தையும், வியாபாரிகளிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget