மேலும் அறிய

தொடர் பலி...தேங்காய்ப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மூடல் - ஆட்சியரிடம் மீனவர்கள் வைத்த கோரிக்கைகள்

மீனவர்களுக்கு மாற்று இடம் தொழில் செய்ய அரசு தரப்பில் இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தொடர் பலி மற்றும் தொடர் போராட்டங்கள் காரணமாக மீன்வளத்துறை சார்பில் மீன் பிடி துறைமுகம் மூடப்பட்டது. துறைமுகம் மூடியதால் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு தொழில் செய்ய மாற்று இடம் வழங்க கோரி மீனவ அமைப்புகள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் அரவிந்திடம் கோரிக்கை விடுத்தனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் 2019 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. துறைமுகம் கட்டும் பொழுதே கட்டுமான பணிகள் சரியில்லை குளறுபடியாக உள்ளதாக மீனவர்கள் கூறியும் கூட அன்றைய அரசு அதில் செவி சாய்க்காமல் வலுக்கட்டாயமாக கட்டி முடித்து திறப்பு விழா செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை கட்டுமான குளறுபடி காரணமாக துறைமுகம் நுழைவாயிலில் வரும் பொழுது மணல் திட்டில் சிக்கி படகுகள் தூக்கி வீசப்பட்டு இதுவரை 28 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசு மீன்பிடி துறைமுகம் சீரமைப்பிற்காக 253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் மீனவர்கள் தரப்பில் இது வெறும் அறிவிப்பாகி விடும் எனவே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை சீரமைப்பு பணிகள் செய்யப்படும் என அறிவித்தும் ஒரு வாரத்துக்கு மேலாகியும் இதுவரை பணிகள் தொடங்குவதற்கான முகாந்திரம் ஏதும் தெரியவில்லை என்று மீனவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.16 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
 
இந்த நிலையில் மீனவர்கள் பலி மற்றும் மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக தேங்காய்ப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம் , மீன் வளத்துறை சார்பில் மூடப்பட்டது. இதனால் இங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு மாற்று இடம் தொழில் செய்ய அரசு தரப்பில் இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை , இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர் பலி...தேங்காய்ப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மூடல் - ஆட்சியரிடம் மீனவர்கள் வைத்த கோரிக்கைகள்
 
இந்நிலையில் நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்த கோரிக்கைகளை மீனவ அமைப்புகள் முன் வைத்தனர்.
 
மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது :
 
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணியினை இம்மாதம் 20-ந் தேதிக்குள் தொடங்கி மூன்று வார காலத்திற்குள் முடிக்கப்படும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மண்டல வாரியாக பிரிக்கவும், தூத்தூர் மண்டலத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம் அமைக்கவும் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி படகு ஆய்வினை வருடாந்திர முறையில் மீன்பிடி தடைகாலத்தில் நடத்திட நடவடிக்கையில் உள்ளது. ஏ.வி.எம். கால்வாயினை விரைவாக தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரையுமன்துறை மீனவ கிராமத்தில் தடுப்புச்சுவர் அமைத்திட ரூ.15 கோடிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இனயம்புத்தன்துறை ஊராட்சியில் உள்ள தெருவிளக்குகளை சமபந்தப்பட்ட பஞ்சாயத்து மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்திட ரூ.40 கோடிக்கு திருத்திய கருத்துரு அனுப்பப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget