மேலும் அறிய
Advertisement
திராவிட இனத்தின் அடையாளங்களை அழித்த அமைப்பு ஆரியம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், திராவிட இனத்தின் அடையாளங்களை அழித்து ஒழித்த அமைப்பு ஆரியம் பற்றி பேசும் அமைப்பு - அமைச்சர்.மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்காங்கடையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறும்போது, தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக தொழிற்சாலைகளுக்கு தேவையான பயிற்சி மாணவர்களுக்கு அளித்து அதன் மூலம் அவர்கள் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது எனவும் கூறினார். இஸ்ரோ மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை இணைந்து புயல் காலங்களில் கடலில் மாயம் ஆகும். மீனவர்களை கண்டறிய சிறப்பு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். தொடர்ந்து
இந்து கலாச்சார அடையாளங்களை மறைக்க பார்க்கிறார்கள் என ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்
“தமிழர்களின் பண்பாட்டு கலாச்சார திராவிட இனத்தின் அடையாளங்களை அழித்து ஒழித்த அமைப்பு ஆரியம் பற்றி பேசும் அமைப்பு.
ஆரியத்தினுடைய அடிப்படை தத்துவமாக அவர்கள் பேசும் சனாதனத்தையும், மனுநீதியையும் கூறுகிறார்கள். திராவடர்களின் அடையாளத்தை, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை நாம் காலம் காலமாக வாழ்ந்த வாழ்வியல் முறையையும், சமத்துவத்தையும் அழித்தவர்கள் யார்? இன்றைக்கு அதனை திராவிட இயக்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் மூலமாக திரும்ப பெற்றிருக்கிறோம்” எனக் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion