மேலும் அறிய

அதிமுக தொடர்ந்த வழக்கில் 13 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன் - சபாநாயகர் அப்பாவு

பத்திரிகை செய்திகளின் வாயிலாக நான் நீதிமன்ற சம்மனை மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் எங்கள் கவனத்திற்கு வந்து அது மறுக்கப்படவில்லை.

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் தொடக்க விழா பாளையங்கோட்டை வ.உ.சி உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை தொடங்கி வைத்த சபாநாயகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்  விளையாட்டுத்துறைக்கு சிறப்பு திட்டங்கள் ஒதுக்கப்பட்டு விளையாட்டு ஊக்குவிக்கப்படுகிறது. முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டிகள் மாவட்டம், மண்டலம், மாநில அளவில் நடைபெறும். பள்ளிகள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 வகையான விளையாட்டு போட்டி வைக்கப்படுகிறது. சிலம்பம் இந்த ஆண்டு மாநில போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் கொண்டு சேர்க்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. 

அதிமுக தொடர்ந்த வழக்கில் 13 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன் - சபாநாயகர் அப்பாவு

தொடர்ந்து கபாடி முதலில் மாநில போட்டியில் சேர்க்கப்பட்டு தற்போது தேசிய போட்டியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட, மண்டல போட்டிகளில் 3 இடங்களுக்கு மட்டும் பரிசு வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் 4 பரிசுகள் வழங்கப்படுகிறது. 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பில் விளையாட்டு தொடர்பான சான்று வைத்திருப்பவர்களுக்கு பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஒரு விழாவில் நான் ஏதோ ஒரு கருத்தை சொல்லியதாக அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். அது சம்பந்தமான எந்த விதமான சம்மனும் எனக்கு இதுவரை எனது சென்னை அலுவலகத்திற்கோ அல்லது முகாம் அலுவலகத்திற்கு வரவில்லை. அனைத்து உதவியாளர்களிடமும் இது பற்றி விசாரித்து விட்டேன் என்றாலும் பத்திரிகை செய்திகளின் வாயிலாக நான் நீதிமன்ற சம்மனை மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் எங்கள் கவனத்திற்கு வந்து அது மறுக்கப்படவில்லை, அது 100% உண்மை. எந்த தபால் வந்தாலும் நான் ஒரு போதும் அதை வாங்க மறுப்பதில்லை. அதுவும் நீதிமன்றத்தில் இருந்து வந்துள்ளது என்றால் உடனே வாங்குபவன். நான் நீதிமன்றத்தை  மதிக்கக் கூடியவன், சம்மன் வரவில்லை என்பதே உண்மை, என் வழக்கறிஞர் ஆலோசனைப்படி  வருகிற 13-ஆம் தேதி நீதிமன்ற சம்மன் வந்தாலும், வராவிட்டாலும் நான் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவேன் என தெரிவித்துள்ளா ர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
Embed widget