நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - ராமநாதபுரம் மாவட்ட கள நிலவரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப் 19 ந்தேதி நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ராம நாதபுரம் மாவட்டத்தில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகள் தயார்நிலையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு ஏற்ப மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ராம நாதபுரம் மாவட்டத்தில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகள் தயார்நிலையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி மற்றும் கீழக்கரை உள்பட 4 நகரசபைகள், சாயல்குடி, கமுதி, அபிராமம், முதுகுளத்தூர், ராஜசிங்க மங்கலம், தொண்டி மற்றும் மண்டபம் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் நகரசபையில் 33 வார்டுகளுக்கு நடை பெற உள்ள தேர்தலில் 63 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இங்கு 28 ஆயிரத்து 32 ஆண் வாக்காளர்களும், 29 ஆயிரத்து 657 பெண் வாக்காளர்களும், 12 திருநங்கைகளும் என மொத்தம் 57 ஆயிரத்து 701 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
பரமக்குடி நகரசபையை பொறுத்த வரையில் 36 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய 83 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 39 ஆயிரத்து 39 ஆண் வாக்காளர்களும், 40 ஆயிரத்து 66 பெண் வாக்காளர்களும், 10 திருநங்கைகளும் என மொத்தம் 79 ஆயிரத்து 115 பேர் வாக்களிக்க உள்ளனர். ராமேசுவரம் நகரசபையை பொறுத்த வரையில் 21 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தலில் 42 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் ராமேசுவரம் நகரசபையில் 18 ஆயிரத்து 117 ஆண் வாக்காளர்களும், 18 ஆயிரத்து 163 பெண் வாக்காளர்களும், 3 திருநங்கைகளும் என் மொத்தம் 36 ஆயிரத்து 283 பேர் வாக்களிக்க உள்ளனர்.
கீழக்கரை நகரசபையில் 21 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தலில் 43 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் 16 ஆயிரத்து 243 ஆண் வாக்காளர்களும், 16 ஆயிரத்து 433 பெண் வாக்காளர்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 32 ஆயிரத்து 677 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகர சபைகளில் 111 வார்டு உறுப்பினர்களை தேர்வுசெய்ய 231 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.மொத்தத்தில் 1 லட்சத்து 1431 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 4 ஆயிரத்து 319 பெண் வாக்காளர்களும், 26 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 776 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
அதேபோல,ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளில் 108 வார்டு கவுன்சிலர்களை தேர்வு செய்ய நடைபெற உள்ள தேர்தலில் 111 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளை பொறுத்த வரையில் மண்டபம் பேரூ ராட்சியில் 18 உறுப்பினர்களை தேர்வு செய்ய 18 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 6 ஆயிரத்து 816 ஆண் வாக்காளர்களும், 6 ஆயிரத்து 982 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 798 பேர் வாக்களிக்க உள்ளனர்.
தொண்டி பேராட்சியில் 15 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய 18 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 7 ஆயிரத்து 151 ஆண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 212 பெண் வாக்காளர்களும் ஒரு திருநங்கையும் என மொத்தம் 14 ஆயிரத்து 364 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பி னர்களை தேர்வு செய்ய 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 5 ஆயிரத்து 389 ஆண் வாக்காளர்களும், 5 ஆயிரத்து 619 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 8 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
அபிராமம் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 2 ஆயிரத்து 856 ஆண் வாக்காளர்களும், 3 ஆயிரத்து 131 பெண் வாக்காளர்களும் 5 ஆயிரத்து 987 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.கமுதி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 4 ஆயிரத்து 846 ஆண் வாக்காளர்களும், 5 ஆயிரத்து 59 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 9 ஆயிரத்து 905 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சாயல்குடி பேரூராட்சியில் 15 வார்டுஉறுப்பினர்களை தேர்வு செய்ய 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 5 ஆயிரத்து 999 ஆண் வாக்காளர்களும், 5 ஆயிரத்து 914 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 5 ஆயிரத்து 417 ஆண் வாக்காளர்களும், 5 ஆயிரத்து 473 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 10 ஆயிரத்து 890 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஆக மொத்தம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளில் 108 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய 111 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில், 38 ஆயிரத்து 474 ஆண் வாக்காளர்களும், 39 ஆயிரத்து 390 பெண் வாக்காளர்களும் ஒரு திருநங்கையும் என மொத்தம் 77 ஆயிரத்து 865 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாவட்டத்தில் அபிராமம் பேரூராட்சி தலைவர் பதவி பெண் (பொது) என்றும் மற்ற 6 பேரூராட்சி தலைவர் பதவி என்பது பொது என ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்,ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சி அலுவலகங்களில், நாளை (ஜன.,28) முதல் வேட்புமனுக்கள் தாக்கல் துவங்குகிறது.10 வார்டுகளுக்கு ஒருவர் வீதம் மனுக்களை வாங்க தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிப்.,19 அன்று நடக்க உள்ள நகர்புற தேர்தலுக்கு நாளை முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டத்தை தவிர்க்க பத்து வார்டுகளுக்கு ஒருவர் வீதம், வேட்பு மனு வாங்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். நகர்புற தேர்தல் தொடர்பாக அலுவலர்கள், அரசியல்கட்சியினர் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.