மேலும் அறிய

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

’’தர்மர்-பஞ்சவர்ணம் தம்பதிக்கு 5 பெண் குழந்தைகளும் ஆறாவதாக ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்’’

அபிராமம் அருகே கிழக்கு தோளுர்பட்டியை சேர்ந்தவர் தர்மர். இவரது மனைவி பஞ்சவர்ணம். தர்மருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.இந்த நிலையில், கடந்த 9-3-2015 அன்று மனைவி பஞ்சவர்ணத்தின் மீது சந்தேகம் அடைந்த கணவர் தர்மர் வீட்டு வாசலில் மண்ணெண்ணையை ஊற்றி எரித்தார்.இதில் பலத்த காயங்களுடன் பஞ்சவர்ணம் அபிராமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இதுகுறித்து அபிராமம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவர் தர்மரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா தர்மருக்கு ஆயுள் தண்டனையும் 3000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் நம்மிடம் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே  மனைவி மீது இருந்து வந்த சந்தேகம் காரணமாக, மனைவியை உயிரோடு எரித்த கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2015ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்றும் மகளிர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே கிழக்கு தொழுளுர் பட்டியை சேர்ந்தவர் தர்மர். இவர் இதே பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். தர்மர்-பஞ்சவர்ணம் தம்பதிக்கு 5 பெண் குழந்தைகளும் ஆறாவதாக ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கள்ளம் கபடமில்லாத பஞ்சவர்ணம் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பேசும் பழக்கம் உள்ளவர் எனவும் யாருக்கும் உதவும் குணம் படைத்தவர்  எனவும் கூறப்படுகிறது.இது வேறு கணவர் தர்மருக்கு தன்னைவிட அழகாக இருந்த மனைவி மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது.இதனால்  பஞ்சவர்ணம் மற்ற ஆண்களுடன் பேசுவது தருமருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆண்களுடன் தேவையில்லாமல் பேசக்கூடாது என பஞ்சவர்ணத்தை அடிக்கடி கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் தன்னுடைய பேச்சை கேட்காததால் பஞ்சவர்ணத்தின் நடத்தையில் கணவர் தருமருக்கு சந்தேகம் அதிகம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒருநாள் இருவருக்குமிடையே இந்த விவகாரம் முற்றிவிட பஞ்சவர்ணத்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார் சந்தேகப்பேய் ஆட்கொண்ட  கணவர் தர்மர். இதை அடுத்து பலத்த தீக்காயங்களுடன் அபிராமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பஞ்சவர்ணம். அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் கணவர் தருமரை போலிசார் கைது செய்தனர். இதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார் தர்மர். பின்னர் பஞ்சவர்ணம் 6 குழந்தைகளை தவிக்கவிட்டு உயிரிழந்தார். தற்போது இந்த 6 குழந்தைகள் உறவினர்கள் ஆதரவில் வளர்ந்து வருவதாக தெரிகிறது.இந்நிலையில் இந்த வழக்கில் ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருமண பந்தத்தை மீறிய உறவு இருந்ததாக மனைவியை எரித்துக் கொலை செய்த தருமருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மேலும் அபராதமாக நீதிமன்றத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதி சுபத்ரா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget