PM Modi Speech: திமுகவை இனி பார்க்க முடியாது... பிரதமர் மோடி ஆவேசம் - நெல்லையில் பேசியது என்ன?
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்றால் அவர்களிடம் பதில் இருக்காது, ஆனால் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்றால் அப்பாக்கு அடுத்து பிள்ளை என்று வம்சாவளி அரசியலை முன்னெடுக்கின்றனர்.
நெல்லையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேச்சு
அனைவருக்கும் வணக்கம் நெல்லை மண்ணில் அருளாசி கொடுத்துக் கொண்டிருக்கும் நெல்லையப்பருக்கும் காந்திமதியம்மைக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து இந்த நாட்டுக்காக உழைக்கும் எனக்கு நல்லாசி தர வேண்டும் என்று வேண்டுகிறேன். நெல்லையில் உங்களை பார்த்ததில் எனக்கு மிகுந்த சந்தோசம். நெல்லை மக்கள் எல்லாம் திருநெல்வேலி அல்வா மாதிரி ரொம்ப இனிமையாகவும், இலகிய மனதோடும் இருப்பவர்கள். நேற்று திருப்பூர் மதுரை சென்றிருந்தேன், இன்று நெல்லை வரும் வாய்ப்பு கிடைத்தது, எல்லா இடங்களிலும் உங்களை பார்க்கும் பொழுது ஒரு பொதுவான பண்பு தெரிகிறது, தமிழகத்தில் இளைஞர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து பிரிவினரும் பாஜக மீது மிகப்பெரிய் நம்பிக்கையை வைத்துள்ளனர்.தமிழக மக்களின் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும். சமூக நீதியை, உண்மையான நேர்மையான அரசியலை எப்படி செய்கிறோம் என கவனித்துக் கொண்டிருக்கின்றனர், உங்கள் நம்பிக்கையை பாஜக முழுமையாக நிறைவேற்றும் என்ற உறுதி மொழியை இன்று திருநெல்வேலியில் உங்கள் முன் வைக்கிறேன். இது மோடியின் உத்திரவாதம். தமிழக மக்கள் வருங்காலத்தை பற்றிய மிக தெளிவாக உள்ளவர்கள். தமிழக மக்களை பாஜகவுடை நெருக்கமாக மாற்றுகிறது. பாஜகவின் சித்தாந்தம் தமிழக மக்களை ஒருங்கிணைக்கிறது.
பாஜக மீது தமிழக மக்களுக்கு புதிய நம்பிக்கை கொண்டு வந்துள்ளது. புதுபிக்கதக்க எரிசக்தியில் உலக நாடுகளுடன் இந்தியா போட்டியில் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வருங்காலத்தை எதிர்காலத்தை பற்றி மிகத் தெளிவுடன் இருப்பார்கள் அதற்கு முக்கிய காரணம் அவர்களது தொழில்நுட்ப அறிவியல் சிறந்தவர்களாக இருப்பார்கள் இதுதான் தமிழகத்தை பாஜகவுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது. பாஜகவின் அணுகுமுறையும் தமிழக மக்களின் எண்ணமும் ஒத்துப் போகிறது. எதிர்காலத்தை நோக்கிய பாஜகவின் சிந்தனையும் மக்களின் சிந்தனையும் ஒன்று படுவதால் தமிழக மக்களுக்கு பாஜகவின் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோல் இந்தியா வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. எரிசக்தி துறையில் வெளிநாட்டுடன் இந்தியாவும் போட்டியிட்டு முன்வருகிறது. புதுப்பிக்க எரிசக்தியில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த வளங்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறது. இந்த நாடு புதிய சிந்தனையோடு செயல்படுகிறது. தமிழ்நாடு இந்த புதிய சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்க போகிறது.
நீங்கள் வெளிநாட்டிற்கு செல்லும்போது அங்கு அவர்கள் உங்களை என்ன மரியாதையோடு பார்க்கிறார்கள். என்ற பார்வையில் இந்தியர்களை அவர்கள் வியப்போடும் மரியாதையோடும் பார்க்கிறார்கள் தானே அந்த பெருமை தமிழக மக்களுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது உலகில் உள்ளவர்கள். இந்தியாவை இவ்வளவு பெருமையாக பார்க்கிறார்கள் என்பது மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சி. இந்த மாற்றம் நிலையான உறுதியான வளர்ச்சியை நோக்கிய மாற்றம் என்பதை உணர்ந்து கொண்ட தமிழக மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்து அதன் பின்னே வர தொடங்கி இருக்கிறார்கள். டெல்லி - தமிழகத்தின் தூரம் மிகவும் குறைந்துவிட்டது. மிகவும் நெருங்கமாக வந்திருக்கிறோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் மூலைமுடுக்கில் இருக்கும் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இது தான் பாஜக அரசு எப்படி செயல்படுகிறது என்பதற்கான சான்று. கிராமப்புற வீடுகளுக்கு ஒரு கோடி நபர்களுக்கு மேலாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் இல்லாமல் ஏழைப் பெண்கள் சொல்ல முடியாத அவதிப்பட்டனர் என்பது தெரியும். வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம் கொடுத்தவுடன் பெண்களின் வாழ்க்கை சுலபமாக உள்ளது. 40 லட்சம் பெண்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு புகையிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது.
நமது பாரத தேசம் 100 மடங்கு முன்னேறினால் தமிழ்நாடும் அதற்கு இணையா 100 மடங்கு முன்னேற வேண்டும். இது மோடியின் உறுதிமொழி. அதனால் 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் எய்ம்ஸ் திறந்த போது தமிழ்நாட்டிலும் எய்ம்ஸ் திறக்கிறோம். தமிழ்நாட்டின் நலனுக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிக்கெல்லாம் ஒத்துழைப்பே கொடுக்காத ஒரு அரசாங்கம் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு என்ன செய்தாலும் ஒரு குறை சொல்கின்றனர். அதை மீறி மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் தான் யோசிக்க வேண்டும் இவர்கள் ஏன் தமிழ்நாட்டின் வளர்ச்சியை திட்டங்களை தடுக்கிறார்கள் என்று? நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வளர்ச்சியை தடுப்பது எதற்காக என்றால் நாட்டை கொள்ளையடிப்பதற்கு தான். ஆனால் மோடி அதை நடக்க விடமாட்டார், இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்துவார். தமிழ்நாட்டுக்கும், ராமருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றனர். நான் அயோத்தியை திறப்பதற்கு முன்பு இங்கிருக்கும் தனுஷ்கோடியில் இருந்து மிகப்பெரிய கோவில்களுக்கெல்லாம் சென்று மிகப்பெரிய ஆசீர்வாதத்தோடு தான் ராமர் கோவிலை திறந்தோம். அதனால் மொத்த தேசமும் மகிழ்ச்சியடைந்தது. திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் மொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதிலிருந்து உங்கள் நம்பிக்கையை அவர்கள் எதிர்க்கிறோம் என்று நிரூபிக்கின்றனர். எங்களுக்கு நாடு, மக்கள், தேசம் தான் முக்கியம், ஏனென்றால் இது வலிமையான, வல்லமையான பாரதம்.
இந்த அரசுகளையெல்லாம் திருத்த வேண்டிய, மாற்ற வேண்டிய காலம், திமுக பொய் வேசம் போடுகிறது. திமுக பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது, ஆனால் இனி திமுகவை பார்க்க முடியாது, இனி இங்க இருக்க முடியாது, ஏனென்றால் அண்ணாமலை வந்துவிட்டார், உங்க கூட இருக்கிறார், இனி திமுகவை தேடினாலும் கிடைக்காது, திமுக முற்றிலுமாக இங்கிருந்து அகற்றப்படும் என்று தெரிவித்தார், என்னிடம் 10 வருட அனுபவமும், அடுத்து 5 வருடம் என்ன செய்யப்போகிறோம் என்ற உறுதியான திட்டமும் உள்ளது. பொருளாதாரத்தில் 5 வது இடத்தில் இருக்கும் இந்தியாவை 3 வது இடத்திற்கு மிக வேகமாக முன்னேற்றப்போகிறது. இந்த சாதனை 3 வது முறையாக ஆட்சிக்கு வரும் போது 3 வது பொருளாதாரத்தில் வல்லமை பெற்ற நாடாக அமையும். அடுத்த ஆண்டுகளில் இந்தியாவின் தொழில் வளம் மிக வேகமாக விரிவுப்படுத்தப்போகிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள், பொறியியல் வல்லுனர்கள் எல்லாம் தங்கள் பாடங்களை தமிழ் மொழியிலேயே படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும். செயற்கை நுண்ணறிவு மூலம் உங்கள் மொழியின் தன்மையும், வலிமையும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் மொழிவாரியாக உருவாக்கப்படும். தென்னிந்திய மக்கள் சந்திக்கும் பிரச்சினை அனைத்தும் பாஜக நன்றாக தெரியும். தென்னிந்திய மக்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் பாஜக செய்யும். இளைஞர்களுக்கான வளர்ச்சி அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் புதிய உத்வேகத்தில் அனைத்து வசதிகளையும் கிடைக்கும்.
2024 தேர்தலில் வளர்ச்சியையும் தொலை நோக்கு பார்வையையும் பாஜக முன்னெடுத்து நிற்கிறது. இப்போது திமுக காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பக்கத்தில் நிற்கிறது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் சேர்ந்து சம்பாதிக்க நிற்கின்றனர். அடுத்ததாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது, ஆனால் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்றால் அப்பாக்கு அடுத்து பிள்ளை என்று வம்சாவளி அரசியலை முன்னெடுக்கின்றனர். தமிழ்நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து கொண்டிருக்கின்றனர், அண்ணாமலை என் மண், என் மக்கள் யாத்திரை மூலம் ஒற்றுமைப்படுத்துகிறார். உங்கள் முன் நிற்கும் எனக்கு தமிழ் மொழி பேசமுடியவில்லையே என்ற ஏக்கம் உள்ளது. அப்போ அப்போ ஒரு சில வார்த்தைகள் பேசுகிறேன், நான் பேசுவதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் இத்தனை ஆயிரம் பேர் என் முன்னால் இருக்கின்றனர். என் உள்ளத்தை என் மனதை புரிந்து கொண்டு எதிரில் இருக்கின்றனர், இந்த நம்பிக்கையை என் மேல் வைத்திருக்கும் உங்களை தலைவணங்கி கும்பிடுகி்றேன் என்று தெரிவித்தார்.