மேலும் அறிய
Advertisement
குமரி: திமிங்கிலத்தின் உமிழ்நீர் கட்டிகளை கடத்திய நபருக்கு கொரோனா - கலக்கத்தில் வனத்துறை அதிகாரிகள்
கைதான ஆறு பேர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதில் பெருவிளையை சேர்ந்த மகேஷ் என்ற கைதிக்கு கொரோனா என்பதால் வனத்துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு திமிங்கிலத்தின் உமிழ்நீர் கட்டிகளை மும்பைக்கு கடத்த முயன்ற போது கைதான ஆறு பேர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அதில் பெருவிளையை சேர்ந்த மகேஷ் என்ற கைதிக்கு கொரோனா என்பதால் வனத்துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதார துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. குறிப்பாக குருந்தன்கோடு, மேல்புறம் ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி, தக்கலை, தோவாளை ஒன்றிய பகுதிகளிலும் பாதிப்பு அதிகரித்தது. தினசரி பாதிப்பு 100 ஐ நெருங்கியதையடுத்து சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 613 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள் ஆவார். 2 குழந்தைகளுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
நாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் சிறையில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிறை கைதி ஒருவருக்கு இன்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவரை ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் கண்காணிப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் உள்ள சக கைதிகளுக்கும் சிறை பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதார துறையினர் முடிவு செய்துள்ளனர். மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறை கைதி பெருவிளையை சேர்ந்த மகேஷ், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து ரயில் நிலையம் மூலமாக மும்பைக்கு திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகளை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்ட ஆறு பேர்களில் ஒருவர் ஆவார். இதனால், வனத்துறையினர் கலக்கமடைந்துள்ளனர். அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion